Tag: dmk

stalin udhayanidhi vijay eps

எப்படியாவது 2029 பாராளுமன்ற தேர்தலுக்குள்ள விஜய் ஆட்சியை கலைச்சிருங்க.. அப்படி கலைக்க முடியலைன்னா தவெக கூட்டணி 40க்கு 40 அடிச்சிரும்.. அப்புறம் அதிமுக, திமுக ரெண்டுல ஒரு கட்சி காலியாகிடும்.. ரெண்டு கட்சியும் காலியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. விஜய் ஆட்சி நல்ல பெயர் வாங்கிடுச்சுன்னா திமுக, அதிமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது..

ஜூன் 8, 2026, 15:05
stalin sad

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக திமுக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.. விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், இடதுசாரிகள் கூட்டணியில் இல்லை.. மதிமுகவின் எம்.எல்.ஏக்கள் உதயசூரியனில் போட்டியிட்டதால் போக முடியாத நிலை.. தேமுதிக இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.. இப்படி திமுக தனிமைப்படுத்தப்பட்டது வரலாற்றிலே இல்லை.. திமுகவுடன் கூட்டணி சேர போட்டி போட்ட கட்சிகள் இன்று போட்டி போட்டு வெளியேறுகின்றன.. திமுகவை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் ஸ்டாலின்.. உடன்பிறப்புகள் ஆதங்கம்…

ஜூன் 7, 2026, 17:50
stalin thiruma vaiko

2 சீட் ஜெயிச்சாலும் சொந்த சின்னத்தில ஜெயிச்சவங்க இன்னிக்கு அமைச்சர் ஆகிட்டாங்க.. 3 எம்.எல்.ஏ வச்சிருக்கிற மதிமுக, உதயசூரியன் சின்னத்துல நின்னதுனால நட்டாத்துல நிக்குது.. இன்னொரு கட்சி சின்னத்துல போட்டியிடுவதற்கு எதுக்கு அரசியல் கட்சி நடத்தனும்.. விசிக, முஸ்லீம் லீக்கிற்கு இருந்த தைரியம் வைகோவுக்கு இல்லையா? பம்பரம் சின்னத்தில் நின்றிருந்தால் இன்று மதிமுகவிலும் ஒரு அமைச்சர் இருந்திருப்பார்… இனிமேல் புலம்பி என்ன பயன்?

ஜூன் 7, 2026, 17:14
nainar eps annamalai

அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற ஒரே காரணம் இதுதான்.. 2029ல் திமுக + பாஜக உறுதி.. அப்போது அண்ணாமலையை தூக்குங்கன்னு திமுககாரங்க சொல்லுவாங்க எடப்பாடி சொன்ன மாதிரி.. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜகவை கொண்டு வர முயற்சித்தேன்.. ஆனால் பாஜக, அதிமுக, திமுக பின்னாடியே போகுது.. இது நமக்கு செட் ஆகாது.. மேலும் தமிழக பாஜகவில் இருக்குறவங்க எல்லோருமே எனக்கு எதிரியாகிட்டாங்க.. இனிமேல் இந்த கட்சியில் குப்பை கொட்ட முடியாது.. மேலிடத்தில் உறுதியாக கூறிய அண்ணாமலை…

ஜூன் 7, 2026, 12:02
annamalai 4

விஜய்யை இப்போதைக்கு அண்ணாமலை தொட மாட்டார்.. மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவனை விமர்சிப்பது தேன் கூட்டில் கல் எறிவது போல்.. அண்ணாமலையின் முதல் டார்கெட் திமுக தான்.. ஒருவேளை 2029ல் திமுக + பாஜக கூட்டணி வந்தால் வச்சு செய்வார்.. ரெண்டாவது டார்கெட் எடப்பாடி.. அவரால் தான் தமிழக பாஜக நாசமாக போனது.. ஈபிஎஸ் சொன்னதை கேட்டு தான் தமிழக பாஜகவும், டெல்லி பாஜகவும் கேட்டு ஏமாந்தது… கடைசியாக தான் அண்ணாமலையின் டார்கெட் விஜய்..

ஜூன் 7, 2026, 11:31
admk dmk 3

கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.. அண்ணாமலை கட்சி ஆரம்பிக்கட்டும்.. அவசரப்பட்டு தவெகவில் இணைந்திட வேண்டாம்.. அதிமுக, திமுகவில் உள்ள அதிருப்தி பிரமுகர்கள் காத்திருப்பு.. அவசரப்பட்டு ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களும் அண்ணாமலை அணிக்கு தாவ திட்டம்.. இனிமேல் அதிமுக, திமுகவுக்கு வாய்ப்பில்லை.. அண்ணாமலை, விஜய் தான் எதிர்கால அரசியல்.. ஈ மொய்ப்பது போல் இரு கட்சியிலும் சேர துடிக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்.. மாறுகிறது தமிழக அரசியல்…

ஜூன் 5, 2026, 11:35
amitshah stalin

பாஜக திமுகவை நன்றாக பயன்படுத்தி கொள்ளும், ஆனால் காலை வாரிவிட்டுவிடும்.. எல்லா மசோதாவையும் நிறைவேற்ற திமுக எம்பிக்களின் ஆதரவை பெற்று கொள்ளும், ஆனால் என்.டி.ஏ கூட்டணியில் திமுகவை சேர்க்காது.. அப்படியே சேர்த்தாலும் அமைச்சர் பதவி கிடைக்காது.. பாஜகவை நம்பி அடுத்த கட்சியில் இருந்த வந்த குஷ்பு, சரத்குமார், விஜயதரணி போல் திமுகவும் ஏமாந்து நிற்கும்..

ஜூன் 4, 2026, 22:12
stalin rahul

காங்கிரஸ் பங்கேற்கும் இந்தியா கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்.. திமுக அறிவிப்பு.. தேசிய அளவில் பாஜகவுக்கும் எதிர்ப்பு.. காங்கிரஸ்க்கும் எதிர்ப்பு.. கும்மிடிபூண்டியை தாண்டாத கட்சிக்கு இதெல்லாம் தேவையா? சிறுபான்மையர், தலித், பெண்கள் ஓட்டை இழந்தாச்சு.. இருந்த ஒரே ஆதரவான இந்தியா கூட்டணியையும் இழந்துட்டு அப்புறம் எப்படி அரசியல் செய்வீங்க.. மத்தியிலும் ஆட்சி இல்லை.. மாநிலத்திலும் ஆட்சி இல்லை.. கட்சி தலைவர் எம்.எல்.ஏ கூட இல்லை.. விரைவில் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மேயர் பதவிகளும் பறிபோய்விடும்.. திமுகவை நினைச்ச கொஞ்சம் பாவமாத்தான் இருக்குது…

ஜூன் 4, 2026, 18:34
vijay annamalai udhayanidhi

எதிர்கால தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆட்டத்திலேயே இருக்காது.. இளைஞர்கள் ஓட்டு 40% வந்துருச்சு.. இவர்கள் ரெண்டு கட்சிக்கும் போட மாட்டார்கள்.. கோர் ஓட்டும் சிதைஞ்சிருச்சு.. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி அரசியல் இனி எடுபடாது.. விஜய் நல்லாட்சி கொடுத்தால் அவரை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.. இல்லையென்றால் இருக்கவே இருக்குது அண்ணாமலை என்ற இன்னொரு ஆப்ஷன்.. திராவிடம் கதை முடிந்தது.. இனிமேல் விஜய் அண்ணாமலை தான் போட்டி.. அண்ணாமலைக்கு முன் விஜய் தாக்கு பிடிப்பாரா? காலம் தான் பதில் சொல்லனும்…

ஜூன் 4, 2026, 15:25
vijay stalin

தேர்தலுக்கு முன்பு செய்த அதே தவறை தேர்தலுக்கு பின்னரும் திமுக செய்து கொண்டிருக்கிறது.. விஜய்யை கேலி செய்வது, தற்குறி என கிண்டல் செய்வது, டெபாசிட் கூட வாங்க மாட்டார் என அவதூறாக பேசியதை மக்கள் ரசிக்கவில்லை.. அதேபோல் விஜய் ஆட்சியை குறை சொல்வதையும் மக்கள் ரசிக்க மாட்டார்கள்.. ஒரு எதிர்க்கட்சி நல்லது செய்யும் போது பாராட்டியும் தவறு செய்யும்போது விமர்சித்தால் மட்டுமே மக்கள் நம்புவார்கள்.. 50 வருடங்கள் மாநிலத்தை சீரழித்த சக்திகள் விமர்சனம் செய்வதற்கான தகுதியையே இழந்துவிட்டன.. கொஞ்சம் நாள் அமைதியாக இருப்பது தான் திராவிட கட்சிகளுக்கு நல்லது. இல்லாவிட்டால் அசிங்கப்பட்டு போயிருவீங்க…

ஜூன் 3, 2026, 17:20
Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

சிறுபான்மையினர் ஓட்டு போயிருச்சு.. எல்லா கூட்டணி கட்சிகளும் துரோகம் செஞ்சிட்டு போயிட்டாங்க.. நாம மட்டும் எதுக்கு பாஜகவை எதிர்க்கனும்.. சிறுபான்மையினர் ஓட்டு போனால் என்ன? ஓபிசி ஓட் நோக்கி பயணம் செய்வோம்.. இனி பாஜகவுடன் தான் கூட்டணி.. ஒரே நேரத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.. மத்திய அரசுடன் கைகோர்ப்போம்.. அமைச்சர் பதவிகளையும் வாங்கி கொள்வோம்.. விஜய்யை ஈசியா சமாளிச்சிடலாம்.. திமுக மேலிடத்தின் திட்டம் இதுதானா?

ஜூன் 3, 2026, 11:38
vijay vs stalin4

திமுகவின் 10 முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் நிர்வாகிகள் என 50 பேர் தவெகவில் சேர ரெடியாக இருக்கிறார்கள்.. லிஸ்ட் முதல்வர் விஜய் டேபிளில் இருக்கிறது.. ஆனால் விஜய் முடியாது என்று சொல்லிவிட்டார்.. தவெக ஒன்னும் வாஷிங் மிஷின் கட்சி அல்ல.. தீய சக்தி கட்சியில் இருந்து யார் வந்தாலும் சேர்க்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்..

ஜூன் 3, 2026, 07:58