அதிமுக, திமுக ஒண்ணா சேரப்போறீங்களா? தாராளமா சேருங்க.. அப்ப ரெண்டு பேருக்கும் சேர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆப்பு வைக்கும்.. எல்லா முன்னாள் அமைச்சர்களும் தயாரா இருங்க.. அரசியல் தெரியாத அரசியல்வாதின்னு விஜய்யை நினைச்சிங்களா? உங்களை விட ஆயிரம் மடங்கு அரசியல் அவருக்கு தெரியும்.. எங்க அடிச்சா எங்க வலிக்கும்ன்னு புரிஞ்சிகிட்டு தான் அரசியலுக்கு வந்திருக்காரு…ஜூலை 14, 2026, 07:46
7 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 4 திமுகவுக்கு 3ன்னு நீங்களே பிரிச்சிகிட்டா போதுமா? ஓட்டு போடுவது கட்சிக்காரன் மட்டுமில்ல, நடுநிலை பொதுமக்களும் தான்.. இதுல ஜெயிச்சிட்டா உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணின்னு கணக்கு போடுறீங்களா? அரசியல் கணக்குல எத்தனை ஜீரோக்கள் சேர்ந்தாலும் 1ஐ ஜெயிக்கவே முடியாது..ஜூலை 14, 2026, 07:30
வாழ்க்கை ஒரு வட்டம் தான்.. இங்க தோக்கறவன் ஜெயிப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.. ஆனால் விஜய் ஒரு மாஸ் புள்ளி.. அது எத்தனை வருஷம் ஆனாலும் மறையாது.. தவெகவை எதிர்த்து அரசியல் செய்வது தற்கொலை அரசியல்.. அந்த தவறை மிக சரியாக திமுகவும், அதிமுகவும் செய்து வருகிறது.. விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் சுதாரித்து கொண்டு அணிமாறிவிட்டன.. அண்ணாமலையும் சில வருடங்களுக்கு தவெக எதிர்ப்பு அரசியல் செய்ய மாட்டார்.. தனக்கான ஆதரவாளர்களை தேடுவாரே தவிர, விஜய் மீது விமர்சனம் வைத்தால் கதம் கதம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.. அதனால் தான் நேற்று விஜய்யை அவர் விமர்சிக்கவில்லை.. முதல் அடியையே புத்திசாலித்தனமாக எடுத்து வைக்கிறார் அண்ணாமலை..ஜூலை 13, 2026, 15:34
துரைமுருகன் ஒரு பேட்டியில எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு பெரிய ஆளுங்களோட விஸ்வரூபத்தை எல்லாம் நாங்க பார்த்திருக்கோம்னு சொல்லியிருக்காரு. எம்.ஜி.ஆர் இருந்தவரைக்கும் திமுகவால ஆட்சியைப் பிடிக்க முடியல, அதேபோலதான் ஜெயலலிதா இருந்த வரைக்கும்னு அவரே வெளிப்படையா ஒத்துக்கிட்டாரு. இதைப் பார்த்தா, இப்போ விஜய் காலம் வந்திருச்சு, அவர்தான் அடுத்து ஆட்சியைப் பிடிப்பாருன்னு இவங்க மனசுக்குள்ள ஒத்துக்க ஆரம்பிச்சுட்டாங்களோன்னு தோணுது. துரைமுருகனே நாங்க விஜயத்தையும் பார்த்திருக்கோம்னு சொல்றப்ப, அதை ஒரு மறைமுகமான ஒப்புதலாத்தான் பார்க்க வேண்டியிருக்கு.ஜூலை 13, 2026, 14:56
127 தொகுதிகளில் விஜய்க்கு கொத்து புரோட்டா போட்டுவிட்டார்களாம்.. கீதா ஜீவன் பேசியது கொஞ்சமாவது நியாயமா? திமுக ஜெயித்தது வெறும் 59 தொகுதிகள் தான்.. அப்ப மீதி 185 தொகுதிகளில் திமுகவுக்கு கொத்து புரோட்டாவா? இதிலும் 234 தொகுதிகளில் தனித்து நின்று ஓன்றில் கூட டெபாசிட் இழக்கவில்லை தவெக.. 20 கட்சி கூட்டணியுடன் போட்டியிட்டு சில தொகுதிகளில் டெபாசிட் இழந்த திமுக பேச யோக்கியதை இருக்கா? டிவிகே பாய்ஸ் பதிலடி..ஜூலை 12, 2026, 22:08
இதுவரைக்கும் திமுக எதிர்க்கட்சியா இருந்தது அதிமுக ஆட்சி எதிராகத்தான், அதனால திமுகவை சிறந்த எதிர்க்கட்சின்னு சொல்றாங்க… ஆனால் இனிமேல் அவங்க தவெக அரசை எதிர்த்து அரசியல் செய்யனும்.. அதுல நிச்சயம் திமுக திணறும்… எம்ஜிஆர் டீசண்ட் அரசியல் செய்தார், ஜெயலலிதா அவசரப்பட்டு சில விஷயங்கள் செய்தார், எடப்பாடி கிட்டத்தட்ட திமுகவுடன் கைகோர்த்தார்.. ஆனால் விஜய் மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான எதிரியை திமுக இதுவரைக்கும் சந்திச்சது இல்லை.. பணபலம், மீடியா, 75 வருட பாரம்பரியம் எல்லாம் விஜய்யிடமும் செல்லாது.. ஜென் சியிடமும் செல்லாது… நிச்சயம் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வந்துரும்… அரசியல் விமர்சகர்கள்…ஜூலை 11, 2026, 21:45
இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லிடா… திமுக போட்ட பேஸ்மெண்ட், எனக்கு அப்புறம் என் மகன் வரனும், அதுக்கு அப்புறம் என் பேரன் வரனும்ங்கிறது.. ஆனால் விஜய் போடுறது எனக்கு அப்புறம் இன்னொரு இளைஞன் வரனும், அதுக்கு அப்புறம் இன்னொரு இளைஞன் வரனும்ங்கிறது… இதுதான் ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்.. எது மக்களுக்கு பிடிக்கும்ன்னு எல்லோருக்கும் தெரியும்..ஜூலை 11, 2026, 21:02
தி.மு.க கூட்டணி தோற்று போனது ஒரு கவலை, அதைவிட நம் கண் முன்னாலையே அ.தி.மு.க சிதறடிக்கப்படுவது இன்னொரு கவலை.. தி.மு.க மறுபடியும் ஆட்சிக்கு வருமானு ஒரு கவலை.. திராவிட அரசியல் இருந்தால் தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டுக்குள் நுழையாது… கவலையுடன் பேசிய திருமாவளவன்.! திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கொள்ளையடித்தால் கவலையில்லை.. மக்கள் பணத்தை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும் குத்தகைக்கு எடுத்து மாறி மாறி சுரண்டினால் கவலையில்லை.. லஞ்சம், ஊழல், புரையோடினால் கவலையில்லை.. அதைவிட முக்கியம் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டுக்குள் நுழையக்கூடாது.. இது என்னப்பா புது அரசியலா இருக்குது? நெட்டிசன்கள் பதிலடி…ஜூலை 11, 2026, 18:25
இன்னிக்கு முதலமைச்சர் விஜய் பேச்சை கேட்டதுக்கு அப்புறமும் தவெக ஆட்சியை கவிழ்க்கனும்ன்னு திமுக, அதிமுக முயற்சிப்பாங்களா? அப்படி முயற்சித்தாங்கன்னா டவுசர் கழண்டுடும்.. அவ்வளவு கோபத்தில் இருக்காரு விஜய்.. மாத்தி மாத்தி கொள்ளையடிச்சதும் இல்லாமல், ஒரு ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே கவிழ்க்க முயற்சித்தா அதை தைரியம் என்று சொல்வதா? அசட்டுத்தனம் என சொல்வதா? என தெரியவில்லை.. அவரை தேவையில்லாம சீண்டிட்டிங்க.. இனிமேல் தப்பிக்கவே முடியாது.. ஆதாரம் திரட்டி முடிஞ்சதும் ஒவ்வொருத்தரா ஜெயிலுக்கு போறது நிச்சயம்…ஜூலை 10, 2026, 19:04
இன்றைய கரூர் கூட்டத்தில் ஒன்றை கவனித்தீர்களா? விஜய் பேச்சில் அதிமுகவை அவர் கண்டு கொள்ளவே இல்லை.. இன்னும் அவர் தவெக – திமுக என்ற போட்டியையே மக்கள் மனதில் விதைக்கிறார்.. அதிமுக ஒரு கட்சியே இல்லை என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்.. இவ்வளவுக்கும் இடைத்தேர்தல் வரும் தொகுதிகள் எல்லாமே அதிமுக வென்ற தொகுதிகள்.. இருப்பினும் தீர்ந்து போன கட்சி என அதிமுகவை விளாசுகிறார்.. முழுசா அரசியல்வாதியாகிவிட்ட விஜய்யை பாருங்க…ஜூலை 10, 2026, 16:30
70 வருஷம் கட்டிக்காத்த சிஸ்டத்தை 2 மாதங்களில் முதல்வர் விஜய் உடைத்துவிட்டாரே என்ற கோபம் தான் அதிமுக, திமுகவுக்கு.. லஞ்சம், ஊழல், கருப்புப்பணம் எல்லாம் முறையாக வந்து கொண்டிருந்தது.. ஆனால் இனி எதுவுமே கிடையாது.. பழைய ஊழல் வழக்கையும் விஜய் தோண்டி எடுக்கிறார்.. இனிமேல் தமிழ்நாட்டில் அரசியலே செய்ய முடியாது.. வேற ஏதாவது மாநிலத்துக்கு தான் போகனும்.. புலம்பும் உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும்….ஜூலை 10, 2026, 09:38