விஜய் பக்கம் வருகிறார் ஓபிஎஸ்.. இரண்டே இரண்டு கோரிக்கை தான்.. ஒன்னு தனக்கு எம்.எல்.ஏ சீட்.. ரெண்டாவது மகனுக்கு எம்பி சீட்.. அதுக்கு பதிலா தென்மாவட்டம் முழுவதும் தவெகவுக்கு வாக்கு வங்கியை உயர்த்தி காட்ட சபதம்.. உன்னால எனக்கு நன்மை.. என்னால உனக்கு நன்மை ஃபார்முலா தான்.. ஓபிஎஸ் ரெடி.. முதல்வர் விஜய் ரெடியா?ஜூலை 30, 2026, 17:37
விஜய் ஆட்சி தொடர்ந்தால் 2 திராவிட கட்சிக்கும் ஆபத்து.. இப்பகூட ஒன்னும் மோசமில்லை.. திருமாவை முதல்வராக்கிடலாம்.. அதிமுகவும் திமுகவும் வெளியில் இருந்து ஆதரவு தரலாம்.. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளில் இருந்து தப்பித்துவிடலாம்.. திராவிட கட்சிகள் இணைந்து மாஸ்டர் பிளான் போடுகிறதா?ஜூலை 30, 2026, 13:59
கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா தான் வரும்… Delimitation மசோதாவை ஆதரிக்க திமுக முடிவா? 78 எம்பிக்கள் என உயர்ந்தால் அதில் 50 தொகுதிகளில் வென்றால் கூட மத்திய அரசை ஆட்டி படைக்கலாம் என்று திமுகவுக்கு யோசனையா? அதுமட்டுமல்ல என்.டி.ஏவில் திமுக சேர்ந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் 2029ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் தேர்தல்.. வாக்குறுதி கொடுத்ததா பாஜக? 3 மாசத்துல தவெக ஆட்சி கவிழவில்லை என்றாலும் 3 வருஷத்தில் கவிழ வாய்ப்பு இருக்கிறதே.. இது ஸ்டாலினுக்கு லாபம் தானே..ஜூலை 30, 2026, 12:59
சிங்கத்தை தனியா சமாளிக்க முடியாது.. கூட்டமா போனா சிங்கம் கூட பின்வாங்கிடும்ன்னு நினைச்சிங்களா?மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் கெட்ட பெயர்.. நேரடியாக ஆதரவு கொடுத்தாலும் கெட்ட பெயர் தான்… நேரடியாக ஆதரவு கொடுத்தால் மத்திய அமைச்சர் பதவியாவது கிடைக்கும்.. அதை வைத்து விஜய்யை உண்டு இல்லை என்று பார்த்து கொள்ளலாம்.. மத்தியில் அதிகாரத்தில் இருந்ததால் தான் ஜெயலலிதாவை சமாளிக்க முடிந்தது.. விஜய்யை சமாளிக்க வேண்டுமானால் நம்மில் 5 பேர் மத்திய அமைச்சர்கள் ஆக வேண்டும்.. முக ஸ்டாலினுக்கு ஆலோசனை சொன்னார்களா திமுக எம்பிக்கள்?ஜூலை 29, 2026, 07:35
சிங்காரம் நீ என்னை தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை இந்த விஜய் சும்மா விட்டதே இல்லை…திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் எதிரிகளை கூட ஈசியா சமாளிச்சிடலாம் போல.. கூடவே இருந்து குழி பறிக்குற கூட்டத்தை தான் முதல்ல விரட்டனும்.. மக்கள் சேவை செய்ய அரசியலுக்கு வந்திருக்கோம்ங்கிற எண்ணமே இல்லாம, பண்ணையார்த்தனம் பண்ணிகிட்டு இருந்தா மீடியா ஒவ்வொன்னுக்கும் என்னைய தான் கிழிக்குறாங்க..ஜூலை 28, 2026, 19:59
கரப்பான் பூச்சி கட்சியின் தலைமையில் அகில இந்திய அளவில் மெகா கூட்டணி.. திமுகவுடனும் கைகோர்க்க முடிவு.. காங்கிரஸ், பாஜக இல்லாத 3வது அணி.. இளைஞர் ஆதரவு இல்லாத திமுகவுக்கு கரப்பான்பூச்சி ஆதரவு மிகப்பெரிய பலம்.. விஜய், அண்ணாமலையை சமாளிக்க கரப்பான்பூச்சியுடன் கைகோர்க்க ஸ்டாலின் முடிவா? 2029ல் என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்…ஜூலை 27, 2026, 21:15
1967ல் மாணவர்களை வைத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல் 2026ல் தவெக அரசை கவிழ்க்க திமுக திட்டமா? அன்று அண்ணாவை நம்பிய மாணவர்கள் இன்று உதயநிதியை நம்புவார்களா? அன்றைய திமுக மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.. இன்று ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களே இல்லை.. டிஜிட்டல் காலத்தில் மாணவர்களை யாரும் ஏமாற்ற முடியாது… விர்ச்சுவல் வாரியர்ஸ் நம்பிக்கை…ஜூலை 27, 2026, 09:14
அச்சச்சோ, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செஞ்சதால பிரச்சனை முடிஞ்சிருச்சே.. இந்த போராட்டம் இன்னும் ஒரு 10 நாள் தொடர்ந்தா, நம்ம சினிமா கூலிகளை வைத்து விஜய்யை திட்ட வைக்கலாம்.. அதுக்கு வாய்ப்பு இல்லாம போயிருச்சே.. புலம்புகிறதா திமுக? அப்ப உங்க உண்மையான நோக்கம் நீட் இல்லை, முதல்வரை திட்டனும், ஆட்சியை விமர்சனம் செய்யனும்.. அதுல குளிர்காயனும்.. மக்கள் எல்லாத்தையும் புரிஞ்சிகிட்டாங்க பாஸ்.. போய் பொழப்ப பாருங்க…ஜூலை 26, 2026, 08:55
டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் திமுகவால பேச முடியலை.. எதிர்ப்பாகவும் பேச முடியலை.. திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது இந்த போராட்டம் நடந்திருந்தால் உதயநிதி டெல்லி போயிருப்பார்.. பாஜகவை வச்சி செஞ்சிருப்பார்.. ஆனால் இப்போதோ மெளனமோ மெளனம்.. ஜென் சி திமுக மட்டுமே ஆதரவு என்ற கோமாளித்தனத்தை செய்து கொண்டிருக்கிறது.. ஸ்டாலின் உள்பட எல்லோரும் மெளனம்.. இதற்கு என்ன அர்த்தம்.. நடுநிலையாளர்கள் கேள்வி…ஜூலை 25, 2026, 14:59
திமுக ஆட்சியில் இல்லாதபோது எல்லாம் போராளிகள் பொங்கி எழுவாங்க.. வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், இவங்க எல்லாம் திமுக ஆட்சியில் இருக்கும்போது வாயை திறக்க மாட்டாங்க.. அப்ப எல்லாம் நீட் பிரச்சனையே இருக்காது.. அப்படியே வாயை திறந்தாலும் பாசிச பாஜக ஒழிகன்னு தான் பேசுவாங்க.. திமுக எதிர்க்கட்சி ஆகிட்டா போதும் எல்லா சக்தியும் வந்துரும்.. அடுத்து சூர்யா, ஜோதிகாவும் வர வாய்ப்பு.. இந்த எண்ணத்துக்கு தான் உங்க எல்லோருடைய சினிமா மார்க்கெட்டும் போயிருச்சு…ஜூலை 25, 2026, 14:39
நீங்க உங்க இஷ்டத்துக்கு போராட்டம் செய்வீங்க.. மத்தவங்க எல்லாம் வேலைவெட்டியை விட்டுட்டு உங்களுக்கு ஆதரவு தரனுமா? போராட்டம்ங்கிற பேர்ல கோமாளித்தனம் செய்வீங்க, உங்களை கொஞ்சனுமாக்கும்.. மோடியை எதிர்த்து கோஷமிடாமல், அமித்ஷாவை எதிர்த்து கோஷமிடாமல் விஜய்யை எதிர்த்து கோஷமிடுவிங்க.. இதுதான் உங்க போராட்டத்தின் லட்சணமாக்கும்…ஜூலை 24, 2026, 17:59
சட்டமன்ற தேர்தலில் கொத்து புரோட்டா போட்ட மாதிரி உள்ளாட்சி தேர்தலில் சூப் வைச்சு செஞ்சு விடனும்.. ஒரு மேயர், ஒரு நகராட்சி தலைவர் பதவி கூட திமுகவுக்கு போய்விட கூடாது.. சரியான வேட்பாளர்.. தவெக அரசின் சாதனைகள்.. உள்ளாட்சியில் செய்யவிருக்கும் புதுமைகள்.. இவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. விர்ச்சுவல் வாரியர்ஸ்களிடம் பொறுப்பை ஒப்படைத்தாரா முதல்வர் விஜய்…ஜூலை 24, 2026, 15:59