சனாதனம் குறித்து உதயநிதி பேசியதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் புண்படுத்தியது.. ஆனால் உதயநிதியின் தஞ்சை பேச்சு ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான பேச்சு என தவெகவால் நரேட்டிவ் செய்யப்பட்டது.. இந்தியா முழுவதும் திமுகவின் உதயநிதி பெண்களுக்கு எதிரானவர் என்ற மனப்பான்மையை விதைத்துவிட்டது.. இதுதான் திமுகவுக்கு மிகப்பெரிய அடி.. கருணாநிதி காலத்தில் இந்தியா முழுவதும் அவர் ராஜதந்திரி என பெருமையாக பேசப்பட்டது.. உதயநிதி காலத்தில் இந்தியா முழுவதும் அவர் ஒரு ஆபாச பேச்சாளர் என பேசப்படுகிறது.. இதில் இருந்து எப்படி வெளியே வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை…ஆகஸ்ட் 6, 2026, 12:15
திமுக அவசரப்பட்டு பாஜக பக்கம் போகிறது.. 2029 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு குறைவு.. இந்தியா கூட்டணியுடன் சிஜேபியும், தவெகவும் சேர்ந்தால் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு.. 12 வருடங்கள் மத்தியில் எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருந்த திமுக, அவசர முடிவால் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய நிலை வரும்… மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக, மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்றால் திமுகவை காப்பாற்ற யாராலும் முடியாது.. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அது தற்கொலைக்கு சமம்.. அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தல்..ஆகஸ்ட் 5, 2026, 16:59
உதயநிதி கைதுக்கு பின்னரும் அமைதியாக இருக்க முடியாது.. கொள்கையெல்லாம் ஓரமாக இருக்கட்டும்.. இப்போதைக்கு பாஜகவுடன் கூட்டணியில் சேருவதை தவிர வேறு வழியில்லை.. மத்தியில் அமைச்சர் பதவியும் கிடைக்கும்.. குடும்பத்தினர்களுக்கு தவெக அரசிடம் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.. அதிரடி முடிவு எடுக்க போகிறாரா ஸ்டாலின்? திமுக வைக்கும் இந்த செக்கை தவெக எப்படி சமாளிக்க போகிறது?ஆகஸ்ட் 5, 2026, 16:23
பயம்மா இருக்கா? இனிமேல் தான் பயங்கரமா இருக்கும்… முதல்முறையாக நம்மிடம் ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை என்பதை திமுக உணர்ந்த நாள் தான் இன்று.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கைது உணர வைத்துள்ளது.. இத்தனை நாள் தோற்றாலும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தார்கள்.. இன்று ஆட்சியில் இல்லாததது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்திருப்பார்கள்.. அதிமுக ஆட்சியில் இருந்தால் கூட தாஜா செய்துவிடலாம்.. ஆனால் முதலமைச்சர் விஜய்யை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதையும் உணர்ந்த நாள்..ஆகஸ்ட் 4, 2026, 16:56
ஆபாசமாக பேசுவது, பெண்களை இழிவாக பேசுவது, இரட்டை அர்த்தத்துடன் பேசுவது திமுகவுக்கு புதிதல்ல.. 70 ஆண்டுகளாக தொடரும் அவலம்.. திமுகவின் 3 தலைமுறையை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர் ஷாலின் மரியா லாரன்ஸ்.. இந்திரா காந்தி, ஜெயலலிதா குறித்து என்ன பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.. காவிரி பிரச்சனை மேடையில் த்ரிஷாவை ஏன் இழுக்க வேண்டும்.. அப்படியே இழுத்தாலும் உதயநிதி அதை கடந்து போயிருக்கலாமே…ஆகஸ்ட் 4, 2026, 16:11
தவெக -திமுக என அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டது.. உதயநிதி கைது கண்டித்து திமுகவினர் போராட்டம்.. திமுகவை கண்டித்தும், கைதுக்கு இனிப்பு வழங்கியும் தவெகவினர் கொண்டாட்டம்.. சீன்லயே இல்லாமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக.. உதயநிதி பேச்சுக்கு நேற்றே அதிமுக கண்டன போராட்டம் நடத்தியிருக்கலாம்.. உதயநிதி வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தியிருக்கலாம்.. ஆனால் ஈபிஎஸ் அமைதியோ அமைதி.. இதனால் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும் அதிமுக?ஆகஸ்ட் 4, 2026, 12:22
உதயநிதியையே தூக்கிட்டாங்களே, நாமெல்லாம் எம்மாத்திரம்.. கடும் அச்சத்தில் முன்னாள் திமுக அமைச்சர்கள்.. என்ன பேசினாலும் அட்ஜெஸ்ட் போற அமைதியான அரசு இல்லை முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு.. அதிரடி நடவடிக்கை எடுக்கும் ஆளுமையான அரசு… அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயனை அடுத்து உதயநிதி.. இனி அடுத்தடுத்து யார் யாரோ?ஆகஸ்ட் 4, 2026, 12:11
அடுக்குமொழி பேச்சால் திமுகவை வளர்த்த அண்ணா, கலைஞர்.. ஆபாச பேச்சால் அழிவுப்பதைக்கு அழைத்து செல்லும் இன்றைய திமுக தலைவர்கள்.. 75 ஆண்டு பவளவிழா பாப்பாவுக்கு மேடையில் எப்படி பேசவேண்டும் என்பது கூட தெரியாதா? இன்று அரசு இளைஞர்களின் கையில் உள்ளது.. முன்பு மாதிரி என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு தப்பிக்க முடியாது.. அரசியல் விமர்சகர்கள் காட்டம்…ஆகஸ்ட் 4, 2026, 11:41
நாங்க சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம்.. உண்ணாவிரதம் இருந்தோம், தீர்மானத்தை ஜனாதிபதியுடம் கொடுத்தோம்ன்னு திமுக சொல்லுதே.. அதனால நீட் ஒழிஞ்சிருச்சா.. எதையெல்லாம் செஞ்சா நீட் ஒழியாதோ, அதையெல்லாம் தேடிப்பிடித்து திமுக பிளான் பண்ணி செஞ்சது.. ஜாமின் வாங்க மட்டும் சுப்ரீம் கோர்ட் போக தெரியுதுல்ல.. நீட் தேர்வை எதிர்த்து திமுக எப்போதாவது சுப்ரீம் கோர்ட் போயிருக்கா? நீட் தேர்வில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வேலையை பாருங்கப்பா…ஆகஸ்ட் 3, 2026, 07:14
மெரள போது ஸ்டேட்டு எங்க விசிலு சத்தம் கேட்டு நல்லவங்கவாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு… மத்தவங்களோட வெற்றியை நம்ம வெற்றின்னு ஸ்டிக்கர் ஒட்டுவதில் திமுகவை அடிச்சிக்கவே முடியாது.. காவிரியில தண்ணீர் திறந்துவிட போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அவசர அவசரமா சுப்ரீம் கோர்ட்டுல ஒரு மனுவை போடுறாங்க.. தண்ணிர் திறந்துவிட்ட உடனே நாங்க மனு போட்டதனால தான் தண்ணி வந்துச்சுன்னு ஒரு பில்டப் கொடுக்க.. மக்களை ஏமாத்த இது ஒன்னும் கருணாநிதி காலம் இல்லை.. விஜய் பவர்ல்ல இருக்குற காலம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் ஒவ்வொன்னையும் உறிச்சு எடுத்துடுவாங்க…ஆகஸ்ட் 2, 2026, 08:30
நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. நேரம் சரியில்லைன்னா அமைதியா இருக்கனும்.. அதைவிட்டுட்டு நான் இப்பவும் கெத்துன்னு முன்னேறி வந்தா அசிங்கப்பட்டு தான் போகனும்.. திமுகவின் ஜென் சி டிராமா, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி.. நீட் போராட்டம் என்ற கோமாளித்தனம்.. இது எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடவில்லை.. இனி என்ன செய்தாலும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்..ஆகஸ்ட் 2, 2026, 07:59
அரசியல் வேண்டாம் தனுஷ்.. குடும்பத்தையே அசிங்கப்படுத்திடுவாங்க… திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றால் வெட்கம், மானம், எதுவும் இருக்க கூடாது.. தங்களுக்கு எதிரி என்று தெரிந்துவிட்டால் இறங்கி அடிப்பார்கள்.. ரஜினி பின்வாங்கியது திமுகவின் அட்டாக்கிற்கு பயந்து தான்.. விஜய் 50 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் பேரதிசயம்.. அவர் மாதிரி எல்லாம் மேஜிக் பண்ண யாராலும் முடியாது.. மொக்கை படத்தை கூட 300 கோடி வசூல் செய்ய வச்சிடுவார்.. தனுஷை எச்சரிக்கும் நெருக்கமான உறவினர்கள்….ஜூலை 31, 2026, 22:00