Tag: annamalai

annamalai students

அண்ணாமலை முதலில் கல்லூரி மாணவர்களை தான் குறிவைப்பார்.. ஒவ்வொரு கல்லூரியிலும் சொற்பொழிவு நடத்தி அவர்களை அறிவுசார் அரசியலுக்கு கொண்டு வருவார்.. விஜய்க்கு விழுந்தது சினிமா மோக வாக்குகள் அல்ல.. திமுக, அதிமுகவை பிடிக்காதவர்கள், விஜய் சரியான நேரத்தில் எண்ட்ரி ஆனதால் அவருக்கு வாக்களித்தனர்.. இனிமேல் திமுக, அதிமுகவை பிடிக்காதவர்கள் அண்ணாமலைக்கு ஓட்டு போட வாய்ப்பு அதிகம்.. விஜய் போன பாதையில் போய் விஜய்க்கே ஆப்பு வைப்பார் அண்ணாமலை.. திமுக, அதிமுக படித்த பள்ளியில் விஜய் ஹெட்மாஸ்டரா இருக்கலாம், ஆனால் அண்ணாமலை பிரின்சிபால்..

ஜூன் 8, 2026, 11:00
admk dmk 3

விஜய்யை இனி யாராலும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது.. விஜய் இல்லாமல் இன்னும் 25 வருடங்களுக்கு தமிழக அரசியல் இல்லை.. திமுக, அதிமுகவுக்கு தான் பெரும் சேதாரம்.. அண்ணாமலை, விஜய், உதயநிதி என்ற ரேஸ் ஏற்பட்டால் கூட விஜய் தான் முதலிடம் வர வாய்ப்பு.. விஜய் மக்கள் செல்வாக்குக்கு முன் அண்ணாமலையின் அறிவார்ந்த அரசியல் பின் தங்கவே வாய்ப்பு.. இந்த ரெண்டு பேருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னாமாக போகிறார் விஜய்? அரசியல் விமர்சகர்கள் கருத்து…

ஜூன் 8, 2026, 08:24
annamalai 4

அண்ணாமலை அரசியல் வேற மாதிரி இருக்கும்.. திமுக, அதிமுகவே திணறியது.. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று திமுக விரும்பியது.. அண்ணாமலை சீட் கொடுக்க வேண்டாம் என அதிமுக அழுத்தம் கொடுத்தது.. அண்ணாமலையை எதிர்க்க திமுக, அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை, அவரை ஓரம்கட்ட வேண்டும் என்று தான் பார்த்தார்கள்.. ஆனாலும் அண்ணாமலை வீறுகொண்டு எழுந்து வருகிறார்.. விஜய் – அண்ணாமலை மோதல் வந்தால் தான் என்ன ரிசல்ட் என்று தெரிய வரும்.. அதிமுக, திமுக நமது பொது எதிரி என இருவரும் கூட்டணி வைப்பார்களா? அல்லது இருவரும் ஒருவருக்கொருவர் மோதுவார்களா? காலம் தான் பதில் சொல்லனும்…

ஜூன் 8, 2026, 07:45
rajini vijay

விஜய் முதல்வரானதை ரஜினியால் பொறுத்து கொள்ள முடியவில்லை.. வயிற்றெரிச்சலில் தான் அண்ணாமலையை தூண்டி விடுகிறார்.. அண்ணாமலை வெளியேறும் அதே நேரத்தில் லதா ரஜினிகாந்த் ஒரு இயக்கம் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? விஜய் ஆட்சி கவிழனும், அல்லது 2031ல் மீண்டும் விஜய் வந்துவிட கூடாது.. இதுதான் ரஜினியின் எண்ணம்.. ரஜினிக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவே கிட்டத்தட்ட முறிந்துவிட்டது..

ஜூன் 7, 2026, 17:34
nainar eps annamalai

அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற ஒரே காரணம் இதுதான்.. 2029ல் திமுக + பாஜக உறுதி.. அப்போது அண்ணாமலையை தூக்குங்கன்னு திமுககாரங்க சொல்லுவாங்க எடப்பாடி சொன்ன மாதிரி.. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜகவை கொண்டு வர முயற்சித்தேன்.. ஆனால் பாஜக, அதிமுக, திமுக பின்னாடியே போகுது.. இது நமக்கு செட் ஆகாது.. மேலும் தமிழக பாஜகவில் இருக்குறவங்க எல்லோருமே எனக்கு எதிரியாகிட்டாங்க.. இனிமேல் இந்த கட்சியில் குப்பை கொட்ட முடியாது.. மேலிடத்தில் உறுதியாக கூறிய அண்ணாமலை…

ஜூன் 7, 2026, 12:02
annamalai 4

விஜய்யை இப்போதைக்கு அண்ணாமலை தொட மாட்டார்.. மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவனை விமர்சிப்பது தேன் கூட்டில் கல் எறிவது போல்.. அண்ணாமலையின் முதல் டார்கெட் திமுக தான்.. ஒருவேளை 2029ல் திமுக + பாஜக கூட்டணி வந்தால் வச்சு செய்வார்.. ரெண்டாவது டார்கெட் எடப்பாடி.. அவரால் தான் தமிழக பாஜக நாசமாக போனது.. ஈபிஎஸ் சொன்னதை கேட்டு தான் தமிழக பாஜகவும், டெல்லி பாஜகவும் கேட்டு ஏமாந்தது… கடைசியாக தான் அண்ணாமலையின் டார்கெட் விஜய்..

ஜூன் 7, 2026, 11:31
vijay vs annamalai 3

Annamalai is very danger.. அண்ணாமலையை சமாளிக்க திமுக, அதிமுகவால் கூட முடியவில்லை.. அதனால் அவரை பதவியில் இருந்து தூக்கினார்கள்.. தனிக்கட்சி ஆரம்பித்து எழுச்சி அடைந்தால் விஜய்யால் அவரை சமாளிக்கவே முடியாது.. அதிமுகவை பிடிக்காதவர்கள், திமுகவை பிடிக்காதவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், நடுநிலையாளர்கள், இளைஞர்கள், பெண்கள் என 20% வாக்கை அண்ணாமலை பெற்றுவிடுவார்.. ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் நிச்சயம் ஆட்சியையும் பிடித்துவிடுவார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு…

ஜூன் 7, 2026, 08:18
vijay vs annamalai vs kanimozhi

விஜய் vs அண்ணாமலை vs கனிமொழி இந்த மும்முனை போட்டி தான் தமிழகத்தின் எதிர்கால அரசியல்.. கலைஞர் திமுக என்ற கட்சியை கனிமொழி ஆரம்பித்தால், விஜய்க்கும் அண்ணாமலைக்கும் சமமான சவால் இருக்கும்.. டெல்லி அரசியலை அறிந்தவர், பத்திரிகையாளர், திறமையாக பேசக்கூடியவர், பெரிய அளவில் ஊழல் புகார் இல்லை.. டீசண்ட் அரசியல் செய்பவர்.. விஜய், அண்ணாமலைக்கு சமமாக கனிமொழிக்கு இளைஞர்கள் மக்கள் ஆதரவு இருக்குமா?

ஜூன் 7, 2026, 07:59
vijay annamalai4

நான் விஜய் ரசிகர் தான்.. தவெகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.. ஆனால் அண்ணாமலை வந்தால் அவருக்கு தான் என் ஆதரவு.. லோக்கல் மீடியாவுல இருந்து என்.டி.டி.வி மீடியாவை அவரை கண்டா அலறுவாங்க.. அவரை கேள்வி கேட்டு லாக் பண்ண பார்ப்பாங்க, ஆனால் அவரு அவங்கள லாக் பண்ணிடுவாரு.. அதுதான் அண்ணாமலை.. தமிழக அரசியல்ல ஒரு சிங்கம் எண்ட்ரின்னு தான் சொல்லனும்.. விஜய் நல்லவர் தான், நல்லாட்சி கொடுப்பாருன்னு நம்பிக்கை இருக்குது.. ஆனால் விஜய்யா? அண்ணாமலையான்னு வந்தா, அண்ணாமலைக்கு தான் என் ஆதரவு.. பொதுமக்கள் கருத்து..

ஜூன் 6, 2026, 15:12
annamalai33

விஜய் முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் 2031ல் யார் முதல்வர் என எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.. அதற்கு ஒரே காரணம் அரசியல் சுனாமி அண்ணாமலை.. பாஜகவில் இருந்து வெளியே வந்தவுடன் குவியும் ஆதரவு.. 2 வருடத்திற்கு முன் தனிக்கட்சி ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் ஆட்சியை பிடித்திருப்பார்.. இப்போதும் மோசமில்லை.. அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்.. உண்மையான இளைஞர்களின் புரட்சி நாயகன்..

ஜூன் 6, 2026, 07:35
annamalai rajini kamal

அண்ணாமலைக்கு ரஜினிகாந்த் முழு அரசியல்.. தன்னால் முடியாத ஆன்மீக அரசியலில் அண்ணாமலை சாதிப்பார் என நம்பிக்கை.. அண்ணாமலை கட்சியில் சேருவார் அல்லது ஆதரவு குரல் கொடுப்பார்.. கமல்ஹாசனும் ஆதரிக்க வாய்ப்பு.. திராவிடத்தால் பாதிக்கப்பட்ட கட்சிகள், அமைப்புகளும் அண்ணாமலைக்கு ஆதரவு தர வாய்ப்பு.. திராவிடம் இல்லா தமிழகம்.. ஊழல் இல்லாத மாநிலம்.. நிம்மதி வாழ்க்கையில் மக்கள்.. தமிழ்நாடு சொர்க்கமாக போகுது..

ஜூன் 6, 2026, 07:20
annamalai abdul

அண்ணாமலையின் கொள்கை தலைவர்கள் அப்துல் கலாம், விவேகானந்தர், நேதாஜி.. பெரியார், அண்ணாவும் கிடையாது.. மோடி, அமித்ஷாவும் கிடையாது.. அனல் பறக்க போகுது அண்ணாமலையின் அரசியல்.. பெரியார், அண்ணாவை மதிக்காத ஒரே தமிழக கட்சி.. திராவிடத்தை ஒழிக்க புறப்பட்ட சிங்கம்.. குவியும் வாழ்த்துக்கள்.. அண்ணாமலை பின்னே செல்ல துடிக்கும் இளைஞர்கள்.. தமிழக அரசியலில் புதிய புரட்சியா?

ஜூன் 6, 2026, 07:09