விஜய்யை வீழ்த்த 1000 அண்ணாமலை வந்தாலும் முடியாது… அண்ணாமலை இயக்கத்திற்கு முதல் நாள் சேர்ந்த உறுப்பினர்களோடு சரி.. அதற்கு பின்னர் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பில்லை.. தவெகவில் ஒரே வாரத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்.. உண்மை இப்படியிருக்க, விஜய்யை அண்ணாமலை தோற்கடித்துவிடுவார் என்பது பகல் கனவு.. அண்ணாமலை பாஜகவில் இருந்து ஒரு மத்திய அமைச்சர் பதவி வாங்கி செட்டில் ஆகியிருக்கலாம்.. திமுக, அதிமுக மாதிரி தவெகவை லேசா நினைச்சிட்டார்… தவெக வீழ்த்த 1000 அண்ணாமலை வந்தாலும் முடியாது…ஜூன் 17, 2026, 07:46
2016க்கு அப்புறம் மக்கள் கூட்டம் தானாக கூடியது என்றால் அது மூன்றே மூன்று பேருக்கு மட்டும் தான்.. ஒன்னு அண்ணாமலை.. ரெண்டு சீமான்.. மூணு விஜய்.. இந்த மூவரில் விஜய் மட்டுமே வெற்றி பெற்றவர்.. ஆட்சியை பிடித்தவர்.. அண்ணாமலைக்கு அடுத்தடுத்து தோல்விகள்.. சீமானுக்கு இன்னும் டெபாசிட்டே கிடைக்கவில்லை.. எனவே விஜய்யை நெருங்க இவர்கள் ரெண்டு பேராலும் முடியாது.. ரெண்டு பேரும் சேர்ந்தாலும் முடியாது.. வந்த கூட்டமெல்லாம் ஓட்டா மாறி ஆட்சியும் அமைச்சாச்சு.. மாற்றத்துக்கான ஆளும் வந்தாச்சு.. இனிமேல் இன்னொரு மாற்றம் தேவையில்லை.. புது பிளேயரும் தேவையில்லை…ஜூன் 13, 2026, 14:15
எதிர்கால தமிழக அரசியல் இந்த 3 பேரால் தான்.. முதல்வர் விஜய், அண்ணாமலை மற்றும் உதயநிதி.. விஜய்க்கு அடிப்படையிலேயே மக்கள் ஆதரவு இருக்குது.. அண்ணாமலை ஒரு நடமாடும் டேட்டா செண்டர், அவரால் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும்.. உதயநிதிக்கு தான் சிக்கல்.. சீனியர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.. ஜூனியர்கள் ட்ரோல் மெட்டீரியல்களாக உள்ளனர்.. விஜய் வெற்றியை நிரூபித்தவர்.. அண்ணாமலை இனிமேல் தான் வெற்றியை ருசிக்க வேண்டும்.. உதயநிதி தலைமையேற்றால் அவருக்கும் சவால் தான்.. என்ன நடக்கும்?ஜூன் 11, 2026, 07:01
1000 அண்ணாமலை வந்தாலும் தவெகவையும் சரி, முதல்வர் விஜய்யையும் சரி அசைக்க முடியாது.. பழம் தின்னு கொட்டை போட்ட திமுக, அதிமுகவையே ஒரே தேர்தல்ல வீழ்த்தியாச்சு, அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம். அண்ணாமலை சார்.. நீங்க நேர்மையான ஆபீசரா இருந்திருக்கலாம், ஆனால் நேர்மையான அரசியல்வாதி இல்லை.. சொந்த உழைப்பில் சம்பாதிச்சு உழைச்ச விஜய்க்கும், நண்பர்கள் கிட்ட காசு வாங்கி வாடகை கொடுக்குற உங்களையும் மக்கள் கம்பேர் பண்ணி பாத்துகிட்டு தான் இருக்காங்க…ஜூன் 10, 2026, 17:12
மண்டையில இருக்குற கொண்டைய மறைக்க மறந்துட்டீங்களே அண்ணாமலை.. பாஜக ஐடி விங் கொடுத்த ஸ்டேட்மெண்டை அப்படியே வாங்கி ட்விட்டர்ல்ல போட்டா எங்களால கண்டுபிடிக்க முடியாதா? பாஜகவில் இருந்து விலகினாலும் இன்னும் நீங்க அவங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கீங்களா? யாரை ஏமாத்த இந்த நாடகம்? நீங்களும் வானதியும் எப்படி கமா, புல்ஸ்டாப் கூட மாறாம ஒரே மாதிரி அறிக்கை விடுவீங்க.. இப்படியெல்லாம் மட்டமான அரசியல் பண்ணினா உங்களால டெபாசிட் கூட வாங்க முடியாது அண்ணாமலை.. நீங்க இன்னொரு சீமானா மாறிடுவீங்க…ஜூன் 10, 2026, 14:27
அண்ணாமலை அவர்களே நீங்கள் ஒரு அதிகாரியாக இருக்க தான் லாயக்கு.. உங்களுக்கு அரசியல் செட் ஆகாது.. அதுவும் தனிக்கடை ஆரம்பிச்சு தமிழ்நாட்டு போனி பண்ணிடலாம்ன்னு நினைக்காதீங்க.. தமிழ்நாட்டுக்கு தேவை கரீஷ்மா லீடர்.. அது எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா மட்டும் தான்.. இப்போது விஜய் கரீஷ்மா லீடராக உள்ளார். உங்களுக்கு நிர்வாக திறமை இருக்கலாம்.. ஆனால் மக்கள் உங்களை நம்பி ஆட்சியை ஒப்படைக்க மாட்டார்கள்.. பாஜக செட் ஆகலைன்னா தவெகவுல இணைஞ்சிருங்க.. இல்லைன்னா வேற கட்சிக்கு போயிருங்க.. தனிக்கட்சி செட் ஆகாது…ஜூன் 10, 2026, 07:25
அதிமுக ஆட்டத்திலேயே இல்லை.. திமுக தேறாதுன்னு தெரிஞ்சிருச்சு.. அண்ணாமலையின் ஒரே டார்கெட் விஜய் மட்டுமே இருக்கும்.. அண்ணாமலை ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சிகிடட்டும்.. நீங்கள் அரசியல்ல தோற்றுபோன தலைவர்.. ஆனால் விஜய் முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவர்.. திமுக, அதிமுகவை விமர்சனம் செய்தால் மக்களே உங்களுக்கு சப்போர்ட் கொடுப்பாங்க.. ஆனால் மக்கள் ஆதரவு பெற்ற விஜய்யை விமர்சனம் செய்தால் அம்பு உங்க மேலேயே திரும்பும்.. நீங்க பெரிய அறிவாளியா இருக்கலாம்.. ஆனால் எங்க ஜென் ஸி பசங்க முன் உங்க புத்திசாலித்தனம் எடுபடாது..ஜூன் 10, 2026, 07:16
அண்ணாமலை நீங்களுமா? பொய்ச்செய்தி பரப்புவது என்பது கொத்தூஸ்களுக்கு பரம்பரை தொழில்.. நீங்கள் எப்போது அந்த கூட்டத்தில் சேர்ந்தீர்கள்.. உங்கள் மேல் இன்னும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.. அரசுக்கு எதிராக பொய்ச்செய்தி பரப்பி அதில் விளம்பரம் தேடலாம் என்றால் பதிலடி கொடுக்க எங்களிடம் ஜென் ஸி இருக்கிறார்கள்.. டீசண்ட் அரசியலை தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்..ஜூன் 10, 2026, 06:57
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது பாதி திமுகவினர் அவர் பின்னால் நின்றனர்.. ஆனால் அண்ணாமலை ஆரம்பித்த இயக்கத்தில் ஒரு பாஜக பிரபலம் கூட வரவில்லை.. அண்ணாமலையை நம்பி எந்த கட்சியில் இருந்தும் யாரும் வரவில்லை.. திமுக, அதிமுகவினர் கூட தவெகவை நோக்கி நகர்கிறார்களே, அண்ணாமலையை கன்சிடர் கூட பண்ணவில்லை.. இதுதான் விஜய்க்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் வித்தியாசம்…ஜூன் 9, 2026, 10:59
அண்ணாமலைக்கு அமர்பிரசாத் ரெட்டி தவிர தமிழக பாஜகவில் உள்ள அத்தனை பேரும் எதிரிகள்.. பாஜகவில் இருந்து அண்ணாமலையை நம்பி ஒருத்தரும் வரமாட்டாங்க.. அதிமுக, திமுகவில் இருந்தும் அண்ணாமலை இயக்கத்திற்கு வருவதற்கு வாய்ப்பு குறைவு.. தவெகவில் இருந்து வர வாய்ப்பே இல்லை.. டிடிவி தினகரன் போன்றோர் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம், ஆனால் அதெல்லாம் தேர்தல் அரசியலில் போனியாகாது.. என்ன செய்ய போகிறார் அண்ணாமலை?ஜூன் 9, 2026, 10:42
எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கலையே.. நாம மோடியின் ஆளுன்னு தெரிஞ்சிருச்சோ.. அண்ணாமலையின் புது இயக்கத்தில் சேர தயங்கும் ஜென் ஸி இளைஞர்கள்.. போன மாசம் வரைக்கும் விஜய்யை ஆதரிச்சிட்டு, இந்த மாசம் எப்படி அண்ணாமலையை ஆதரிப்பார்கள்.. ஜென் ஸி இளைஞர்கள் என்ன பதவிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகளா? ஆதரவு என்பது தன்னெழுச்சியா வரனும்? விஜய்க்கு மட்டும் தான் அந்த அதிர்ஷ்டம்…ஜூன் 9, 2026, 09:43
தேர்தல் அரசியலில் அண்ணாமலைக்கு தோல்வி மேல் தோல்வி தான்.. 2021 தேர்தலில் அவரே தோல்வி அடைந்தார்.. பாஜக 4 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி.. 2024 தேர்தலில் அண்ணாமலை கோவையில் தோல்வி அடைந்தார்.. அவர் அமைத்த கூட்டணிக்கு ஒரு வெற்றி கூட இல்லை.. 2026ல் அண்ணாமலை போட்டியிடவில்லை என்றாலும், அவர் பிரச்சாரம் செய்தும் ஒரே ஒரு தொகுதியில் தான் வெற்றி.. 3 தேர்தலில் தோல்வி அடைந்த அண்ணாமலை எங்கே? முதல் தேர்தலிலேயே ஆட்சி அமைத்த விஜய் எங்கே? ரெண்டு பேரையும் ஒப்பிடவே கூடாது…ஜூன் 8, 2026, 18:48