மிரட்டும் பாபி தியோல்.. மிரளவைக்கும் கங்குவா போஸ்டர்.. சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் Animal நாயகன்

2023-ம் ஆண்டின் இறுதியில் வந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பான்இந்தியா திரைப்படம் தான் அனிமல். ரன்வீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா ஆகியோர் நடித்த இப்படம் பாக்ஸ்ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலைல் இப்படத்தில் நடித்துள்ள பாலிவுட் நாயகன் பாபி தியோல் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் பாபி தியோல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் சூர்யா பிறந்த நாளையொட்டி கங்குவா படத்தின் போஸ்டர் வெளியானது. இந்தி சினிமாவில் புகழ் பெற்ற பாபி தியோலின் கங்குவா ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் வெறித்தனமான புது போஸ்டர் இப்போது வெளியாகி கவனிக்க வைத்துள்ளது.

இந்தப் போஸ்டர் பார்த்தவுடனேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. போஸ்டரில் தலையில் மான் கொம்போடு வித்தியாசமான உடையில் கூட்டத்திற்கு மத்தியில் மிரட்டலான தோற்றத்தில் உள்ளார் பாபி தியோல். பாலிவுட்டில் பல படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய பாபி தியோல் ‘கங்குவா’ படத்திலும் அசத்தலான நடிப்பைக் கொடுக்க உள்ளார். இந்தப் படத்தின் ஒவ்வொரு புரோமோஷனல் மெட்டீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்த நிலைக்கு உயர்த்துவதாகவே உள்ளது.

டாப் கன் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாங்க!.. கடைசில ஃபைட்டர் படத்தோட பாக்ஸ் ஆபிஸ் இவ்ளோ தானா?..

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்களிலும் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

பான்-இந்தியன் படமான ‘கங்குவா’வின் பணிகள் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் நடிகர் சூர்யா தனது படப்பிடிப்பை முடித்துள்ளார்.
சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்க, ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்.. இது மட்டும் இருந்தா தினமும் ரஜினிக்கு தேனிலவு தானாம்..

2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடஸ்டுடியோ கிரீன் பல சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.