இதெல்லாம் ஒரு கிளைமேக்ஸா..? நல்லாவே இல்லையே..! தூற்றியவர்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் விக்ரமன்..

தமிழ் சினிமாக்களில் நட்புக்கு இலக்கணமாக எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலான படங்கள் நண்பர்களுக்கிடையேயான நட்பினை மையப்படுத்தி மட்டுமே எடுக்கப்பட்ருக்கும். ஆனால் நண்பன்-தோழி என்ற வகையில் எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவே. 1981-ல் ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த பாலைவனச் சோலை படம் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு. 5 நண்பர்கள் வட்டாரத்தில் இணையும் ஒரு தோழியும் அவர்களுக்கிடையே உள்ள நட்பினையும் இந்தப் படம் ஆழமாகப் பேசியிருக்கும்.

இதேபாணியில் குடும்பப் படங்களின் இயக்குநர் விக்ரமனின் முதல் படமாக வெளிவந்தது தான் புது வசந்தம். பெரும்பாலும் விக்ரமன் படங்கள் என்றாலே மென்மையான காதல், குடும்ப உறவுகள், அமைதியான வசனங்கள் போன்றவை நிறைந்திருக்கும். இன்றும் விக்ரமன் படங்களில் வரும் வசனங்கள் சினிமா ரசிகர்கள் பலருக்கு அத்துப்படி.

அந்தவகையில் விக்ரமன் இயக்கத்தில், சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரியின் தயாரிப்பில் 1990-ல் வெளிவந்த புதுவசந்தம் திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. பாடல்களுக்காகவும், நல்ல கதைக்காகவும் படம் ஓஹாவென ஒடியது. பாலைவனச் சோலை படம் போன்றே நான்கு நண்பர்கள், ஒரு தோழி இவர்களுக்குள் உருவாகும் அழகிய நட்பினை பேசியது இத்திரைப்படம். முரளி, சித்தாரா, ராஜா, சார்லி, ஆனந்த் பாபு, சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜியிடம் கரெக்சன் சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்.. படையப்பா பட ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் கிளைமேக்ஸைப் பார்த்தவர்கள் இது என்ன படம்.. கடைசி வரை நன்றாக வந்து கிளைமேக்ஸில் இப்படி சொதப்பி விட்டாரே.. என்ற இயக்குநர் விக்ரமனின் காதுபடவே பேசியிருக்கின்றனர். மேலும் முதலில் ஆர்.பி.சௌத்ரியும் படத்தைப் பார்த்து ஓகே சொல்லிவிட்டு பின்னர் படத்தின் கிளைமேக்ஸ் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வர, அவர் விக்ரமனைக் கூப்பிட்டு உடனடியாக வேறு கிளைமேக்ஸ் எடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் விக்ரமன் இந்தக் கிளைமேக்ஸ்தான் நன்றாக இருக்கும் என்று கூற, அவர் கேட்கவில்லை.

எனவே வேறுவழியின்றி சித்தாரா தனியாகச் செல்வது போல் மற்றொரு கிளைமேக்ஸையும் எடுத்துத் தயாராகி வைத்து சென்சார் போர்டு மற்றும் விநியோகதஸ்தர்களிடம் போட்டுக் காட்டியிருக்கின்றனர். ஆனால் முதலில் இருந்த கிளைமேக்ஸே நன்றாக இருந்திருக்கிறது என்று கூற, மீண்டும் ஆர்.பி.சௌத்ரி விக்ரமனை அழைத்து முதலில் இருந்த கிளைமேக்ஸே இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார். விக்ரமனும் நானும் அதைத்தானே சொன்னேன் என்று கூறி அதன்பின் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியது வரலாறு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...