டாப் கன் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாங்க!.. கடைசில ஃபைட்டர் படத்தோட பாக்ஸ் ஆபிஸ் இவ்ளோ தானா?..

கடந்த ஆண்டு பாலிவுட்டுக்கு சிறந்த ஆண்டாக விளங்கிய நிலையில், இந்த ஆண்டு பாலிவுட் ஆரம்பத்திலேயே பெரிதளவில் அடிவாங்க துவங்கிவிட்டது. 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

அதன் பின்னர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஆயிரத்தில் 100 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது. அந்த படத்தில் தென்னிந்திய நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் ஆண்டு இறுதியில். ஷாருக்கான் நடித்த டங்கி திரைப்படமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் அள்ளியது.

பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய பாலிவுட்:

கதர் 2, ஆதி புருஷ், அனிமல் உள்ளிட்ட படங்களும் 500 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டின. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் திரைப்படம் 200 முதல் 220 கோடி வசூலை உலகம் முழுவதும் ஈட்டியுள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஷாருக்கான் மற்றும் சல்மான்கானின் எந்த ஒரு படங்களும் வழியாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இதன் காரணமாக பாலிவுட் திரையுலகம் பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டு மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபைட்டர் வசூல் இவ்வளவு தானா?:

வார் மற்றும் பதான் படங்களை இயக்கிய சித்தார் தொடர்ந்து இயக்கத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ஃபைட்டர் திரைப்படம் ஜெட் ஃபைட்டர்களின் உருவாக உருவாகியிருந்த நிலையில், டாம் குரூஸின் டாப் கன் பட பாணியில் பணம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் வார நாட்களில் வசூல் செய்ய கடுமையாக போராடி வருகிறது. அதிகபட்சமாக 300 கோடி வசூல் தான் வரும் எனக் கூறுகின்றனர்.

கோலிவுட் நிலைமையும் ஜனவரி மாதத்தில் பெரிதாக ஷைன் ஆகவில்லை. இப்போதைக்கு டோலிவுட் திரையுலகம் தான் ஹனுமான் படத்தின் வெற்றி காரணமாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், தமிழ் சினிமா சம்மர் மாதத்துக்கு பின்னர் தான் மிகப்பெரிய எழுச்சி அடையும் என்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.