எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்… சென்சார் போர்டையே திணறடித்த வரிகள்…!

தமிழ்த்திரை உலகில் சில பாடல்கள் தான் காலத்தால் அழிக்க முடியாதவையாக இருக்கும். அப்படிப்பட்ட பாடல் தான் இது. இந்தப் பாடல் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாமா…

தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டாராம். இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது.

இயக்குநர் பீம்சிங் ப வரிசை படங்கள் மூலம் தமிழகத்தின் பண்பாடு, பாசத்தை நிலைநாட்டியவர். அப்படிப்பட்ட ஒரு படம் பாசமலர். இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

PasaMalar
PasaMalar

இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.

தோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.

பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.

மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ… என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நய்யாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.

திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். இது காலம் கடந்தும் நிற்கும் பாடல். கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கடைசி வரிகளைப் பாருங்கள். மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும். மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும். இதை விட கண்ணியமாக எந்தக் கவிஞராலும் சொல்ல முடியாது. தொடர்ந்து வரும் வரிகள் முத்தாய்ப்பானவை. இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ… இதுவல்லவோ பாடல் என்று நம்மை வியக்க வைக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...