தளபதிக்குப் பின் மம்முட்டியை ஒதுக்கிய ரஜினி… மீண்டும் இணைய மறுத்த கூட்டணி… எந்தப் படத்தில் தெரியுமா?

மணிரத்னம் இயக்தில் தமிழ் சூப்பர் ஸ்டாரும், மலையாளத்தின் மெகா ஸ்டாரும் இணைந்து நடித்த படம் தான் தளபதி. மகாபாரத இதிகாசத்தில் வரும் கர்ணன்-துரியோதனன் கதையைத் தழுவி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை‘ படத்திற்குப் பின் ரஜினி என்ற நல்ல நடிகனை வெளிக் கொண்டு வந்தது.

முற்றிலும் ஸ்டைல், பஞ்ச் வசனங்கள் இல்லாமல் அமைதியான நடிப்பில் மணிரத்னத்திற்கே உருவான இயல்பான இயக்கத்தில் ரஜினி-மம்முட்டி இருவரும் நீயா நானா என போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா.. சூர்யான்னா என்னான்னு தெரியுமா? என மம்முட்டி – ரஜினியின் கதாபாத்திரங்களான சூர்யா-தேவா என அசத்தியிருப்பார்கள். இதனையடுத்து மீண்டும் இந்தக் கூட்டணி இந்தக் கூட்டணி இணையுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்க பாட்ஷா படத்தின் பணிகள் ஆரம்பமானது.

ரியல் அன்வர் பாட்ஷா கேரக்டரில் மம்முட்டியை நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொல்ல ரஜினி அதை மறுத்திருக்கிறார். ஏனென்றால் இருவரும் தற்போது தான் தளபதி படத்தில் நடித்திருக்கிறோம். மேலும் பாட்ஷா கதையும் நட்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை எனவே இரு படங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல சுரேஷ் கிருஷ்ணாவும் அதை ஒப்புக் கொண்டார்.

பின்னர் பாட்ஷா கேரக்டருக்கு யாரைப் போடலாம் என விவாதம் எழ ஜென்டில் மேன் படத்தில் முரட்டு போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ் பெற்ற சரண்ராஜ் நினைவு ரஜினிக்கு வரவே அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

EVERGREEN பட வரிசையில் இணைந்த ஜெய்பீம் : X தளத்தில் சூர்யா போட்ட நெகிழ்ச்சி டுவீட்

கதைப்படி ஒரிஜினல் பாட்ஷா என்றால் அது சரண்ராஜ் தான். எனவே படத்தின் டைட்டிலும் அவரது கதாபாத்திரப் பெயரிலேயே அமைந்ததால் சரண்ராஜ்க்கு இந்தப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆனது. படத்தில் இருவரும் நண்பர்கள். மாணிக்கமாக ரஜினி நடிக்க அன்வர் பாட்ஷாவாக சரண்ராஜ் நடித்திருப்பார்.

Baasha 1

கதைப்படி சரண்ராஜ் இறந்து போக தனது நண்பர் பெயரைச் சேர்த்து மாணிக் பாட்ஷாவாக மும்பையின் டானாக உருவெடுத்து ரகுவரனை அதகளம் செய்யும் காட்சி இன்றளவும் பக்கா கமர்ஷியல் ஹிட் வரிசையில் முதலிடம் பெறுகிறது.

பேசுன வார்த்தையையே பாடலாக மாற்றிய கண்ணதாசன்… கவிஞர் எங்க இருந்து பாடல் எழுதினாரு தெரியுமா?

இப்படத்தின் கேரக்டர் குறித்து நடிகர் சரண்ராஜ் கூறுகையில், “நான்தான் பாட்ஷா என்று எனக்குத் தெரியாது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்தால் எப்படி புகழ் பெறுவோம் என்று பாட்ஷா நிரூபித்தது. மேலும் இன்றளவும் ரம்ஜான் பண்டிகை என்றால் பாட்ஷா படத்தில் நானும் ரஜினிசாரும் இணைந்து நடித்த காட்சிகளை அனுப்பி எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்“ என்று கூறியுள்ளார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் என்றால் அது பாட்ஷா மட்டுமே. தமிழ் திரையுலகில் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படமும் பாட்ஷாதான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...