பேசுன வார்த்தையையே பாடலாக மாற்றிய கண்ணதாசன்… கவிஞர் எங்க இருந்து பாடல் எழுதினாரு தெரியுமா?

கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். ஒரு காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த கவிஞர்களில் ஒருவர். இவரின் பாடல்கள் பலவித அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் இவரின் பாடல் வரிகள் அமைந்திருக்கும். ஒரு படத்தில் உள்ள பாடல்களின் வெற்றிக்கு அப்பாடல் வரிகளே முக்கியமானது. அப்படிபட வரிகளை மிகச்சிறப்பாக கொடுப்பவர் கண்ணதாசன். இவர் பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாமல் பல இலக்கிய நயம் மிக்க புத்தகங்களையும் எழுதியுள்ளார். கன்னியின் காதலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராய் அறிமுகமானார்.

கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி

பின் களத்தூர் கண்ணம்மா, பாசமலர், கர்ணன் போன்ற பல திரைப்படங்களுக்கு பல பாடல்களை எழுதியுள்ளார். மூன்றாம் பிறை திரைப்படம்தான் இவர் பாடம் எழுதிய கடைசி திரைப்படம். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். திராவிட கழகத்தில் இருந்து விலகி தமிழ் தேசிய கட்சியினை தொடங்கினார்.

இவர் ஒரு காலத்தில் அனைத்து இயக்குனர்களாலும் மிகவும் விரும்பப்பட்ட கவிஞர் இவர். இவர் அரசியலில் இருந்தபோது அவ்வபோது கட்சி பணிகளை பார்க்க வெளியூர் சென்றுவிடுவாராம். அவர் சென்னைக்கு திரும்ப வரும்போது அனைத்து இயக்குனர்களும் அவரை பார்க்க செல்வார்களாம். பாடல்களை எழுதியும் வாங்கி விடுவார்களாம்.

காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!

இயக்குனர் பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான் ஆலயமணி. இவர் கண்ணதாசன் எங்கு இருக்கிறார் என அறிந்து அவரிடம் பாடல்களை எழுதி வாங்க நேரிலே சென்றுவிட்டாராம். அப்படத்தில் சிவாஜி மலையில் இருந்து கீழே குதித்துவிடுவார். ஆனால் ஏழை ஒருவரால் காப்பாற்றப்பட்டு அவரது வீட்டில் தங்கியிருப்பார். இந்த கதையை வீரப்பா கண்ணதாசனிடம் கூற அவரோ மறுநாள் வர சொல்கிறார். ஆனால் மறுநாள் சென்று பார்த்தால் அன்றைக்கும் அவர் பாடலை எழுதி தரவில்லையாம். இவ்வாறாக கிட்டதட்ட 20 நாட்கள் ஆகிவிட்டதாம்.

கடுப்பான வீரப்பா கவிஞரை நேரிலே சென்று பார்க்க சென்றுவிட்டாராம். அப்போது கவிஞர் இப்போது பொதுக்கூட்டத்தில் இருப்பதாகவும் மதியம் எக்மோர் நீதிமன்றத்தில் வந்து தன்னை பார்க்கும்படியும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். உடனே வீரப்பா என்ன கவிஞரே ஒரு பாடலுக்காகவா இத்தனை நாட்கள் அலைய வைப்பீர்கள்…சட்டி சுட்டுச்சு கை விட்டுச்சு என பாடலை எழுதி தராமல் இப்படி இழுத்து அடிக்கிறீர்களே.. என கேட்டுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு பயந்த நம்பியார்… களத்துல இறக்கி வேடிக்கை பார்த்த பாக்கியராஜ்….

இந்த வார்த்தைகளை மனதில் வைத்து இன்று கண்டிப்பாக பாடலை தந்துவிடுகிறேன் என கூறிவிட்டு அவர் பொதுக்கூட்டத்திற்கு சென்றுவிடுகிறார். பின் நீதிமன்றத்துக்கு சென்ற கண்ணதாசன் அக்கிருந்தே பாடலை எழுதி முடித்துள்ளார். அந்த பாடல்தான் சட்டி சுட்டதடா…கை விட்டதடா… என்ற பாடல். இப்பாடலில் கண்ணதாசன் பல அர்த்தங்களை உள்ளடக்கியிருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...