முத்து படத்தில் ரசிகர்களை கவர்ந்த நடிகை.. அட, அவங்க சகோதரியும் ஒரு பிரபல நடிகை தானா?

ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன், ரஜினிகாந்த் நடித்த முத்து உள்பட சில தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை சுபஸ்ரீ. தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் சுபஸ்ரீ நடித்திருந்தாலும் அதில் அவருக்கு கிடைத்த கதாபத்திரம் மக்கள் மத்தியல் அவரை அதிகமாக கொண்டு சேர்த்தது.

நடிகை சுபஸ்ரீ சென்னையை சேர்ந்தவர். கடந்த 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே நடிப்புக்காக தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். 1993 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த எங்க தம்பி என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜென்டில்மேன் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். இவர் போலீஸ் அதிகாரியாக நடித்த சரண்ராஜின் ஜோடியாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து அவர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் உருவான கண்மணி என்ற திரைப்படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு முத்து திரைப்படத்தில் பத்மினி என்ற கேரக்டரில் சுபஸ்ரீ கலக்கி இருப்பார். தொடர்ந்து தாய் தங்கை பாசம், ஆறு, சாமி, மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

subhasri

தமிழில் இவர் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் கன்னடம் மற்றும் தெலுங்கு திரை உலகில் அதிக படங்களில் நடித்துள்ளார். நடிகை சுபஸ்ரீ கடந்த 1998 ஆம் ஆண்டு நீரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு திரை உலகில் இருந்து விலகிவிட்டார்.

சுபஸ்ரீயின் சகோதரி மாலாஸ்ரீயும் கூட ஒரு பிரபல நடிகை தான். குறிப்பாக கன்னட திரையுலகில் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளதுடன் மட்டுமில்லாமல் ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் இவர் இமயம், நீலமலர்கள், மனக்கணக்கு, சின்ன சின்ன ஆசைகள், ஆத்தா நான் பாசாயிட்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

திரை உலகில் பல சகோதரி நடிகைகள் இருந்த நிலையில் அவர்களில் ஒரு சகோதரிகள் நடிகைகளாக இருந்தவர்கள் தான் சுபஸ்ரீ மற்றும் மாலாஸ்ரீ ஆகியோர். சுபஸ்ரீ போலவே மாலாஸ்ரீயும் திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகிவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது கணவர் ராமு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews