சுப காரியங்களுக்காக வெளியில் செல்கிறீர்களா?! அப்ப இதை செய்துட்டு போங்க!!

மனித வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது. மகனின் படிப்பு, மகளின் வரன் தேடுதல், வீடு கட்ட இடத்தேர்வு, லோன் வாங்குதல், தேர்வு.. இப்படி பல நல்ல காரியங்களுக்காக வெளியில் செல்கிறோம். அப்படி நம்பிக்கையாய் செல்லும்போது அந்த காரியம் வெற்றியடைய இறையருளும், சரியான சூழலும் இருக்க வேண்டும். அதனால், கீழ்க்காணும் சின்ன சின்ன பரிகார முறைகளை செய்துக்கொண்டால் நல்ல பலன் கிட்டும்.

4d3279a6ff903c1082b53b4d5462da84-2

ஞாயிற்றுக்கிழமைகளில் சுப காரியங்களுக்காக வெளியே செல்லும்போது ஒரு வெற்றிலையை வாயில் மென்று சாப்பிட்டப்பின் கிளம்ப்லாம். வெற்றிலை சாப்பிடும் பழக்கமில்லாதவர்கள் வெற்றிலையை மடித்து சட்டைப்பையில், கைப்பையில் வைத்துக்கொள்ளலாம். 

05a90789878765edecb79c33ce69eb32-1

திங்கட்கிழமைகளில்  சுப காரியங்களுக்காக வெளியே செல்லும்போது உங்களது முகத்தை, உங்கள் வீட்டு கண்ணாடியில் பார்த்து விட்டு செல்வது நன்மை தரும்.

3238d91c3ee738f20d0ceae4673954d1

செவ்வாய்க்கிழமைகளில் சுப காரியங்களுக்காக வெளியே செல்லும்போது, அனுமனை மனதார நினைத்து வேண்டிக்கொண்டு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு செல்வது நல்ல பலனை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் வெளியில் செல்வதற்கு முன்பு சிறிதளவு சர்க்கரையோ அல்லது இனிப்பினை சாப்பிட்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்

5343b27be052082f668bd3605ff66bfd

புதன்கிழமைகளில்  வெளியில் செல்லும்போது புதினா இலை, கொத்தமல்லி இலை அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் எதாவது ஒரு பொருளை, பச்சையாக சாப்பிட முடியுமோ அதை சாப்பிட்டு விட்டு செல்வது நன்மை தரும். வெள்ளரிக்காய், வெண்டைக்காய் கூட சாப்பிடலாம்.

464da98704b8de82b5ed2e2d2a83fab8-1

வியாழக்கிழமைகளில் வெளிய செல்லும்போது சிறிது சீரகத்தை வாயில் போட்டுக் கொண்டு சென்றால் நல்ல பலன் கொடுக்கும்.

b717a38d1b717da799ab03a0931834c9

பொதுவாகவே வெள்ளிக்கிழமை மங்களகரமான நாளாகும். இந்த நாள் சுபகாரியங்கள் செய்ய மிகச்சிறந்த நாள் ஆகும். அதனால்,  சுப காரியத்திற்காக வெளியில் செல்வதற்கு முன்பு சிறிதளவு தயிரை சாப்பிட்டு விட்டு சென்றால், அந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.

8f8fbafb34d0aa248f24b23d70490297

சனிக்கிழமைகளில் வெளியில் செல்லும்முன் சிறிதளவு இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டு சென்றால், அந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். இஞ்சியை மென்று சாப்பிட முடியாதவர்கள் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து கூட சாப்பிடலாம்.

வெளியில் கிளம்பும்முன் சாமி படத்தின்முன் நின்று விளக்கேற்றி, இஷ்ட தெய்வம், குலதெய்வத்தினை வேண்டிக்கொண்டு, இப்படி சின்ன சின்ன பரிகாரங்களை செய்துவிட்டு கிளம்பினால், நாம் நினைத்து செல்லும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews