தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

தனுசு இராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் பார்வையால் குரு இருப்பதால் தொழில், பணம் ரீதியாக மிகவும் அமைதி காக்க வேண்டிய மாதம்தான் ஆகஸ்ட் மாதம்.

எந்தவொரு ஆரவாரத்துடனும் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.

புதிய வேலைகள், வேலைகளில் இடமாற்றம், தொழில் அபிவிருத்தி, புதிய தொழில் துவங்குதல் என அனைத்தையும் காலம் பொறுத்துச் செய்தல் ஆதாயமான பலனைக் கொடுக்கும். அவசரம் நஷ்டத்தில் சென்று நிறுத்தும்.

செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு மாறும். குடும்ப வாழ்க்கை ரீதியாக பிரச்சினைகள், மனஸ்தாபங்கள் ஏற்படும். மன உளைச்சலையும், பிரச்சினைகளையும் தவிர்க்க வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த்தல் நல்லது. அனுசரித்துச் செல்தல் வேண்டும்.

திருமணம் சார்ந்த காரியங்களில் ஈடுபடுவோருக்கு தாங்கள் எதிர்பார்த்ததுபோன்ற வரன் அமைவது கடினம். இதனால் சிறிது காலம் தாழ்த்துதல் நல்லது.

மாணவர்களைப் பொறுத்தவரை தயக்கம் நிறைந்த மாதமாக இருக்கும். மேற்கல்வி ரீதியாக முயற்சி எடுப்போர் 20 ஆம் தேதிக்குள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும்.

உடல் நலனைப் பொறுத்தவரை கூடுதல் அக்கறை செலுத்துதல் வேண்டும். மருத்துவரீதியான வீண் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப உறவுகளையும் சரி உங்களையும் சரி எவ்வளவோ முயன்றும் 100 சதவீதம் திருப்திப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.