மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

மகரம் ராசியினைப் பொறுத்தவரை புதன் பகவானின் பார்வை உச்சமடையும். சனி பகவான் மகரத்திலேயே இருக்கும். சுக்கிரனின் பார்வை மகரத்தின் மீது விழும்.

கிரகங்களின் பார்வையால் மிகவும் சாதகமான பலனைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். தொழில் ரீதியாக மன அழுத்தம் இல்லாமல் மிகவும் நிம்மதியுடன் வேலை பார்க்கலாம்.

வேலை மாற்றம், இடமாற்றம் வேண்டுவோர் சுக்கிரனின் பார்வையினை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொழில் செய்து வருவோர் மத்தியில் பணப் புழக்கம் அதிகமாகவே இருக்கும். மேலும் தொழில் அபிவிருத்தி செய்யும் முயற்சிகள் உங்களுக்கு லாபத்தினையே கொடுக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை காரசாரமான விவாதங்கள் பிரச்சினைகளுக்கு வித்திடும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி தாண்டவமாடும்.

திருமண சார்ந்த காரியங்களைச் செய்ய நினைப்போருக்கு ஏழரைச் சனி தடங்கலை ஏற்படுத்தும். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருப்போருக்கு ப்ரேக் ஆகும் வாய்ப்புகளும் உண்டு.

சுப காரியங்களைப் பொறுத்தவரை முடிவெடுக்கும் மாதமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை உடல்நலனில் அக்கறை தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

மாணவர்களைப் பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் குழப்பத்தினை அதிகமாகவே ஏற்படுத்தும். தன்னம்பிக்கையோடு செயல்படுதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.