விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

விருச்சிக இராசியினைப் பொறுத்தவரையில் சனி பகவான் மற்றும் குரு பகவான் வக்கிரமடைந்த காரணத்தினால் சாதகமான காலமாக இருக்கும்.

செவ்வாயின் பார்வை  ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு மேல் விருச்சிகத்தின் மேல் படுவதால் புத்திகூர்மையினைக் கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும்.

சுக்கிரன் நகர்வு 7 ஆம் தேதிக்கு மேல் இருப்பதால் நேர்மறையான பலன்கள் எதிர்பார்க்கலாம். தொழில்ரீதியாக இவ்வளவு காலம் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுதரும் காலமாக இருக்கும். அதேபோல் வேலை பார்ப்போருக்கும் இதுவரை பட்ட கஷ்டங்கள் பனிபோல் விலகும் காலமாகவே இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் இதுவரை சந்தித்த பிரச்சினைகள், போராட்டங்கள், மனக் கசப்புகள், பிரிவுகள் என அனைத்திற்கும் மாற்றம் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை நேர்மறையான எண்ணங்களைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். தன்னம்பிக்கையினை அதிகரித்து படிப்பில் மேம்பட்டு விளங்க உதவச் செய்யும்.

அதேபோல் வீடு, மனை வாங்க நினைத்திருந்தோருக்கு மிகவும் சாதகமான காலகட்டமாக ஆகஸ்ட் மாதம் இருக்கும். மேலும் வண்டி, வாகனங்கள் வாங்க நினைத்திருப்போரும் தாரளமாக வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.

திருமண சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு மனப்பூர்வமான வரன்கள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் நிறைந்த மாதமாகவே இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.