துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நகர்வு சிறப்பான பலனைத் தரும். சந்திரன் நகர்வு சாதகமான மாதமாக இருக்கும். வேலைவாய்ப்பு ரீதியாக மாற்றத்தினை எதிர்பார்ப்போருக்கு நினைத்தது கைகூடும் மாதமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற வீண் சண்டை சச்சரவுகளால் மன உளைச்சல்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் ரீதியாக எதிர்பார்ப்போருக்கு சிறிது தடங்கல்கள் இருந்தாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கப் பெறும்.

உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. குடும்பப் பிரச்சினைகள், மனரீதியான பிரச்சினைகள், வேலைவாய்ப்பு ரீதியான பிரச்சினைகள் அனைத்துமே உடல் நலன் சார்ந்த பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப சுமைகள் அதிகரிக்கும். மாணவர்கள் மனநலனில் சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பிற கோள்களின் இடையூறுகளால் எந்தவொரு முடிவினையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுத்தல் வேண்டும்.

பல மாதங்களாக தடைபட்டு வந்த திருமண காரியங்கள் நடந்தேறும். வீடு வாங்கும் ஆதாயம் உள்ளது. மேலும் வாகனங்கள் வாங்க பல ஆண்டுகள் நினைத்தோரின் எண்ணங்கள் கைகூடும்.

எதிலும் தேவை சிறு கவனம். குடும்பத்தில் அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews