கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

கன்னி இராசியினைப் பொறுத்தவரை 21 ஆம் தேதிக்குப் பின் புதன் பகவான் உச்சமடைதல், குருவின் பார்வை கன்னியின் மீது படுதல் போன்றவை மிகச் சிறந்த விஷயங்களாகும்.

செவ்வாய் பகவான் 10 ஆம் தேதிக்குப் பின் இடப் பெயர்வு செய்வதால் ஏற்கனவே இருந்த உடல் ரீதியான பிரச்சினைகள் சரியாகும். சுக்கிரன் 10, 11 ஆம் இடத்திற்கு இடப்பெயர்வு செய்வதால் மாதம் முழுமையும் சாதகமான மாதமாகவே இருக்கும்.

தொழில்ரீதியாக இதுவரை கிடைக்காமல் இருந்த வேலைகளும் கிடைக்கப் பெறும். மேலும் இதுவரை கடின உழைப்புப் போட்டு பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த விஷயங்களும் அதிர்ஷ்டத்தால் கைகூடும்.

புதிய முயற்சிகள் எதுவாக இருந்தாலும், தொழில் அபிவிருத்தி என என்ன திட்டமாக இருந்தாலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிக்குள் எடுக்கவும். குடும்ப வாழ்க்கையில் மறைமுகமாக பிறர் ரீதியாக வரக்கூடிய பிரச்சினைகள், சண்டைகள் ஏற்படும்.

திருமண காரியங்கள் செய்ய நினைப்போர் தாராளமாக அதற்கான வேலைகளில் ஈடுபடலாம். காதல் திருமணம் செய்யக் காத்திருந்தோருக்கு காலம் கனிந்து உங்களுக்கு நற் செய்தியினையே கொடுக்கும்.

உடல் நலனைப் பொறுத்தவரை பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. மாணவர்கள் கல்வி நலனில் மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews