சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

சுக்கிரனின் இடமாற்றம் வேலைவாய்ப்பு ரீதியாக பிரச்சினைகள் சந்தித்தாலும், வேலைமாற்றம் செய்யும் முயற்சியிலோ புதிதாக வேலை தேடும் முயற்சியிலோ ஈடுபட வேண்டாம்.

மேலும் தொழில்ரீதியான மாறுதல்கள் பெரிதளவில் ஆதாயம் தருவதாய் இருக்காது. தொழில்ரீதியாக அபிவிருத்தி எதையும் செய்யாமல், இருப்பதை தக்கவைத்துச் செல்வது நல்லது.

சிறப்பாக ஆலோசித்துச் செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை ராது- கேதுவால் இடையூறுகள் இல்லை. சுக போகங்களைத் தரும் சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருப்பதால் குடும்ப உறவுகளில் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

எதைப் பேசினாலும் பிரச்சினைகளுக்கு வழிகோலும், உறவுகள் ரீதியாக முறிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. திருமண சார்ந்த விஷயங்கள் மறை பார்வையால் இருப்பதால் சுப பலன்கள் தள்ளிப் போகும்.

குடும்பப் பெண்களுக்கு கடன் சார்ந்த சுமைகளை சுமக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகள் அதிகம் ஏற்படும் என்பதால் கவனத்துடன் செயல்படுதல் வேண்டும். மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை.

வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. மாணவர்களின் கல்வியினைப் பொறுத்தவரை மந்தநிலையிலேயே காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுத்தலைத் தள்ளி வைத்தல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews