Spotify நிறுவனத்திற்கு $5 மில்லியன் அபராதம்.. டேட்டாவை தவறாக பயன்படுத்தியதா?

டிஜிட்டல் மியூசிக் நிறுவனமான Spotify நிறுவனத்திற்கு ஸ்வீடன் அரசு 5 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் உள்பட உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள பாடல்களை தொகுத்து வழங்கும் டிஜிட்டல் நிறுவனம் தான் Spotify என்பதும் இந்நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் Spotify நிறுவனத்திற்கு ஐந்து மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் பொது டேட்டா பாதுகாப்பு ஒழுங்கு முறையின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Spotify நிறுவனம் தான் சேகரிக்கும் பயனர்களின் டேட்டாக்களின் தகவல்களை பயனர்களுக்கு வழங்கவில்லை என்றும் டேட்டா சேகரிப்பில் இருந்து பயனர்கள் விலகுவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என்றும் பயனர்களின் டேட்டாக்கள் போதுமான அளவு பாதுகாக்கப்படவில்லை என்பதையும் கண்டறிந்ததை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஸ்வீடன் அரசின் அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய Spotify திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. டேட்டாக்களை தாங்கள் மிகவும் தீவிரமாக பாதுகாத்து வருவதாகவும் ஸ்வீடன் அரசால் எழுப்பப்பட்ட சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் Spotify நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் பொதுமக்களின் டேட்டாக்களை எவ்வாறு சேகரிக்கின்றன? அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன? என்பதை வெளிப்படை தன்மையுடன் அறிவிக்க வேண்டும் என்றும் தனி நபர்கள் தங்கள் டேட்டாக்களை திருத்தவோ நீக்குவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் ஸ்வீடன் நாட்டு சட்டம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தை மீறியதால் தான் Spotify நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews