அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் நடிகர் சூரியின் காளையை அடக்கிய காளையர்.. குவியும் பாராட்டு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வரும் நிலையில் சீறிவரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்.

இன்று காலை சரியாக ஏழு மணிக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். அவருடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட பலர் இருந்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் உடன் நடிகர் சூரியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் பல பிரபலங்களின் காளைகள் அடக்கப்பட்ட நிலையில் நடிகர் சூரியின் காளையும் சீறி வந்தது. முதல் கட்டத்தில் அந்த காளையை யாராலும் அடக்க முடியாத நிலையில் இரண்டாவது கட்டமாக ஒரு இளைஞர் முன்னேறிச் சென்று சூரியின் காளையை பிடித்து அடக்கினார். இதனை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் சூரியன் காளையை அடக்கிய இளைஞருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூரி தன்னுடைய காளையை வீரர் ஒருவர் அடக்கும்போது அமைச்சர் உதயநிதியுடன் இணைந்து அதை பார்த்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.