ரூ.19,999 விலையில் சோனியின் இயர்பட்.. அப்படி என்ன இருக்குது அதில்?

சோனி நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே தரமாக இருக்கும் என்றும் குறிப்பாக கேமரா மற்றும் இசை சம்பந்தப்பட்ட சாதனங்கள் மிகப்பெரிய அளவில் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இம்மாதம் சோனி நிறுவனம் புதிய இயர்பட் ஒன்றாஇ அறிமுகம் செய்துள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள், விலை மற்றும் பிற தகவல்களை தற்போது பார்ப்போம்.

சோனி நிறுவனம் Sony WF-1000XM4 TWS என்ற மாடல் இயர்பட் சாதனத்தை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமான சார்ஜிங், இலகுவான எடை மற்றும் சிறந்த ஹார்ட்வேர் ஆகிய கொண்டவையாக இந்த சாதனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் Sony WF-1000XM5 இயர்பட் கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் முந்தைய Sony WF-1000XM4 TWS இயர்பட்களின் வடிவமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் Sony WF-1000XM5 இயர்பட்களின் எடை 5.9 கிராம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது WF-1000XM4 மாடலின் 7.4 கிராமை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Sony TWS இயர்பட்களை மூன்று நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு மணிநேரம் கேட்கும் திறன் கொண்டிருக்கும். மேலும் இதில் மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி அவுட்-ஆஃப்-பாக்ஸை வழங்க வாய்ப்புள்ளது. அதாவது அவை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களுடன் இணைக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் இதன் விலை ரூ. 19,990 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews