சோனியின் இந்த டிவி விலை ரூ.322,990.00.. அப்படி என்ன இருக்கிறது இதில்?

சோனி நிறுவனம் என்றாலே விலை உயர்வாக இருந்தாலும் பொருள்கள் தரமாக இருக்கும் என்பதும் சோனி நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சோனி நிறுவனம் தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஒரு தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ள நிலையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த தொலைக்காட்சிகள் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

Sony A95K 65 இன்ச் 4K Ultra HD OLED ஆண்ட்ராய்டு டிவி என்பது சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிவியின் அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

* 4K தெளிவுத்திறன் மற்றும் (3840 x 2160 பிக்சல்கள்) 65-இன்ச் OLED டிஸ்ப்ளே
* மென்மையான இயக்கத்திற்கான 100 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
* மேம்படுத்தப்பட்ட படம் மற்றும் ஒலி தரத்திற்கான அறிவாற்றல் செயலி XR
* XR Triluminos Max™ இருப்பதால் மிகச்சிறந்த வண்ணம்
* Dolby Atmos அதிவேக சரவுண்ட் ஒலி

Sony A95K டிவி இந்தியாவில் ரூ.3,69,990 விலையில் உள்ளது. ஆனால் சில வங்கிகள் கிரெடிட் கார்டு சலுகைகள் பெற்றால் இதன் விலை ரூ.322,990.00 என கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட சோனி மையங்கள், சோனியின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முக்கிய மின்னணு விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.

சிறந்த படம் மற்றும் ஒலி, ஒளி தரத்துடன் கூடிய உயர்நிலை டிவியை நீங்கள் தேடுகிறீர்களானால், Sony A95K சிறந்த தேர்வாகும். இருப்பினும், இது சற்று விலை உயர்ந்தது, எனவே நீங்கள் பட்ஜெட்டில் இருந்தால் மற்ற மாடல்களைக் கருத்தில் கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...