எம்ஜிஆரின் படத்துடன் போட்டி போட முடியாமல் திணறிய சிவாஜி படம்… எது தெரியுமா?

எம்ஜிஆர், சிவாஜி கால கட்டத்தில் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி நடைபெற்றது. இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடும். ரசிகர்களும் வரிந்து கட்டிக் கொண்டு படம் வெளியான நாளில் திரையரங்குகளைத் திருவிழா கோலமாக மாற்றிவிடுவர். இப்போதும் ரீரிலீஸில் வரும் எம்ஜிஆர் படங்கள் சாதாரணமாக 50 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெறுகின்றன. அதற்கு உதாரணமே உலகம் சுற்றும் வாலிபன் தான்.

இருவருக்கும் தோல்விப் படங்களைக் காட்டிலும் வெற்றிப்படங்களே அதிகம். ஒருமுறை சிவாஜி படம் அதிக நாள்கள் ஓடும். இன்னொரு முறை எம்ஜிஆர் படம் அதிக நாள் ஓடும். ஆனால இருவரது படங்களும் வெற்றி வாகை சூடும்போது வசூலை வாரி இறைத்தது எம்ஜிஆர் படம். அந்தவகையில் 1975ல் எம்ஜிஆரின் ஒரு படத்துடன் சிவாஜியின் படம் போட்டிப் போட முடியாமல் திணறியதாம். அது எந்தெந்தப் படங்கள்னு பார்க்கலாமா…

எம்ஜிஆர் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த படம் இதயக்கனி. இந்தப் படம் அப்போது எம்ஜிஆர் இருந்த அதிமுகவுக்கு பெரும் விளம்பரமாகவே அமைந்து விட்டது. இதயக்கனியுடன் போட்டி போட முடியாமல் திணறிய சிவாஜி படமும் உண்டு.

1975ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன் ஆகிய 3 படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

Ithayakani, ATM
Ithayakani, ATM

மதுரை சிந்தாமணி தியேட்டரில் இதயக்கனி 150 நாள்களும், சென்னை சத்யம் தியேட்டரில் 110 நாள்களும் ஓடின. எம்ஜிஆரின் அதிமுக கட்சியின் பிரச்சார படமாகவும், நீங்க நல்லா இருக்கணும் பாடல் கட்சியின் கொள்கைப் பாடலாகவும் அமைந்தன. ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றி பெற்றது. தாறுமாறான வசூலைப் பெற்று பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

கிராமப்புறத்தில் இன்னும் அதிகமான மாஸைக் காட்டியது. அதே நேரம் சிவாஜியின் அவன் தான் மனிதன் வெளியானது. 110 நாள்கள் ஓடியது. இதயக்கனியுடன் ஒப்பிட்டால் அவன் தான் மனிதன் வசூல் குறைவு தான். இதயக்கனி படத்தில் நல்ல பாடல்கள் அமைந்தன. நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற, இன்பமே உந்தன் பேர், தொட்ட இடம், ஒன்றும் அறியாத ஆகிய பாடல்கள் உள்ளன.

இதையும் படிங்க… ஒரு வழியா இந்தியன் 2 ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்.. எப்போ தெரியுமா?

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். அதே போல அவன் தான் மனிதன் படத்தில் அன்பு நடமாடும், ஜலிதா வனிதா, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி, மனிதன் நினைப்பதுண்டு ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவரும் எம்எஸ்.விஸ்வநாதன் தான். மேலும் அதே ஆண்டில் சிவாஜி நடித்த மன்னவன் வந்தானடி படமும் 100 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. இருந்தாலும் இதயக்கனி முன் அவன்தான் மனிதன் திணறியது என்றே சொல்ல வேண்டும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...