ஒரு வழியா இந்தியன் 2 ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்.. எப்போ தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட் இன்று அதிரடியாக வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு லைகா நிறுவனம் கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி என அடுத்தடுத்து பெரிய படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது.

இந்தியன் 2 ரிலீஸ் அறிவிப்பு:

சில ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது ரிலீஸுக்கே தயாராகி விட்டது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 மட்டுமின்றி இந்தியன் 3 படமும் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

தேர்தல் என்பதால் பல பெரிய படங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகவில்லை. ஜூன் மாதத்துக்கு பிறகு தான் பல பெரிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ஆனால், எந்த தேதியில் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.

ஆனால், வரும் ஜூன் 13ம் தேதி தான் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் வெளியானால் இந்தியன் படத்தை போலவே மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து ஷங்கரின் கேம் சேஞ்சர் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. அதனை தொடர்ந்து இந்தியன் 3 வெளியாகும் எனக் கூறுகின்றனர்.

ஊழலுக்கு எதிரான ஒரு படமாக மீண்டும் இந்தியன் சேனாபதி கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் டீசர் பிஜிஎம் எல்லாம் விரைவில் வெளியாக போகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...