இறந்தவர் வீட்டிலேயே கொலைகாரன் தங்க வேண்டும்… நீதி படத்தின் அருமையான கதை….!!

பொதுவாக கொலை செய்த கொலைகாரனை சிறைக்குச் அனுப்புவது அல்லது தூக்கு தண்டனை விதிப்பது என்பது தான் நீதிபதியின் தீர்ப்பாக இருக்கும். ஆனால் கொலைகாரனை, கொலை செய்யப்பட்டவன் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பளித்த கதையம்சம் கொண்ட திரைப்படம் தான் நீதி.

கே பாலாஜி தயாரிப்பில், சிவி ராஜேந்திரன் இயக்கத்தில், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சௌகார் ஜானகி நடித்த படம் நீதி. இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட் ஆன துஷ்மன் என்ற திரைப்படத்தின் ரீமேக் துஷ்மன் படத்தில் ராஜேஷ் கண்ணா நடித்த வேடத்தில் தான் தமிழில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தின் கதையின் படி சிவாஜி கணேசன் லாரி டிரைவராக இருப்பார்.

ஒரு மழைநாளில் அவர் லாரி ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது அவரது லாரியில் சிக்கி ஒருவர் இறந்து விடுவார். இறந்தவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும். லாரியில் சிக்கி இறந்த அந்த ஒரே ஒருவர் வருமானத்தை வைத்து தான் ஒரு பெரிய குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அந்த குடும்பம் நிர்கதியாக இருக்கும்.

“இருவர் உள்ளம்” வெற்றிக்கதை….. இதில் சிவாஜி அம்மா யார் தெரியுமா…..?

neethi1

இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது கொலை செய்யப்பட்டவரின் வீட்டிலேயே இரண்டு வருடங்கள் கொலைகாரன் தங்க வேண்டும் என்றும் அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வித்தியாசமான தீர்ப்பை தருவார் நீதிபதி மேஜர் சுந்தர்ராஜன். அதன் பிறகு கொலை செய்யப்பட்ட அந்த நபரின் வீட்டில் தங்கும் சிவாஜிக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

குழந்தை பசியால் துடிக்கும் போது சிவாஜி வாங்கி தந்த ஜாங்கிரியை குழந்தை ஆசையோடு சாப்பிட போகும்போது உன் அப்பாவை லாரி ஏற்றி கொன்ற பாவி தருவதையா சாப்பிடுவது என்று தூக்கி தாயார் சவுகார் ஜானகி புழுதியில் வீசுவார். அதை அந்த குழந்தை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி அபாரம். சிவாஜி ஒரு குடிகாரன் வேடமாக இருந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக மனோரமா நடித்த ஒரே படம்.. யாகவா முனிவரை ஞாபகப்படுத்தும் படம்..!

தன்னுடைய கவனக்குறைவால் ஒரு குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விட்டது என அவ்வப்போது அவர் மனம் நொந்து போகும் காட்சிகள் அபாரமாக இருக்கும். சௌகார் ஜானகி தான் கொலை செய்யப்பட்டவரின் மனைவியாக நடித்திருப்பார். கணவர் இல்லாமல் தன்னுடைய குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் சிவாஜியை பார்க்கும் போதெல்லாம் தன் கணவனை கொலை செய்தவன் என்று ஆவேசமடைவது என நன்றாக நடித்திருந்தார்.

neethi2

மேலும் நீதிபதியாக மேஜர் சுந்தரராஜன், வில்லனாக மனோகர், சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா, மற்றும் எம்ஆர்ஆர் வாசு, மனோரமா என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர், சிவாஜியை சௌகார் ஜானகியின் குடும்பமே வெறுக்கும் நிலையில் ஒவ்வொருவராக சிவாஜி உடன் எப்படி நெருக்கமாவார்கள் என்பதும் கடைசியாக சவுகார் ஜானகி சிவாஜியை தனது குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டது எப்படி என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?

இந்த படம் கடந்த 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி வெளியானது. வசூல் அளவில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தவில்லை என்றாலும் சிவாஜி நடிப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற பாடல் இன்றளவும் பிரபலம் என்று கூறலாம். மொத்தத்தில் சிவாஜி கணேசனின் அருமையான நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...