சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக மனோரமா நடித்த ஒரே படம்.. யாகவா முனிவரை ஞாபகப்படுத்தும் படம்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மனோரமா பல திரைப்படங்களில் நடித்திருந்தார் என்றாலும் இருவரும் ஜோடியாக நடித்த ஒரே திரைப்படம் ஞான பறவை என்ற திரைப்படம்தான். யாகவா முனிவரின் கதையை சாயலாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூட யாகவா புரொடக்சன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படம் வெளியானது. மிகப்பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. சிவாஜி கணேசன், மனோரமா முதல் முறையாக ஜோடியாக நடித்ததால் பலர் இந்த படத்தை பார்க்க முன்வந்தனர்.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

gnanaparavai1

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியை ஒருதலையாக காதலிப்பதுபோல் மனோரமா நடித்திருந்தாலும் முதல் முதலாக அவருக்கு மனைவியாக நடித்தது இந்த படத்தில் தான். இந்த படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் ஒரு முதியவராக இருப்பார், அவர் ஒரு நபரை பார்த்தவுடன் அவரது எதிர்காலத்தை கணித்து சொல்ல கூடிய அளவுக்கு ஞானம் பெற்று இருப்பார்.

இந்த நிலையில் கிரி என்ற ஒரு பணக்கார இளைஞர் தனது நண்பர்களுக்காக நிறைய பணம் செலவழிப்பார். அவர் சிவாஜியின் மகள் அருணாவை காதலிப்பார். ஆனால் அருணா அவரது காதலை நிராகரித்து அவமானப்படுத்தி விடுவார். இதனால் கிரி தனது நண்பர்களுடன் சேர்ந்து அருணாவை கேலி, கிண்டல் செய்ய அருணா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து இறந்து விடுவார்.

தனது மகள் சாகப் போகிறார் என்பதை முன்கூட்டியே சிவாஜி கணேசன் அறிந்து கொண்டாலும் அவர் தனது மனைவி மனோரமாவிடம் அதை சொல்ல மாட்டார். அப்போதுதான் மனோரமா அவரிடம் சண்டை போடுவார், எல்லோரது சாவையும் முன்கூட்டியே தெரிந்து கொண்ட நீங்கள் மகள் சாவை ஏன் அறிந்து கொள்ளவில்லை என்று கூறுவார். அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் சுவாரசியமாக இருக்கும்.

முதலமைச்சர் எம்ஜிஆரிடம் அனுமதி வாங்கி சிவாஜி படம் எடுத்த தயாரிப்பாளர்… எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ஏமாற்றம்..!

இந்த நிலையில் தான் கிரி சசிகலாவை காதலிப்பார். இந்த காதலுக்கு சில பிரச்சனைகள் வரும். குறிப்பாக சசிகலாவை தீர்த்துக்கட்டவே ஒரு சிலர் முயற்சி செய்வார்கள். அப்போது சிவாஜி கணேசன் உதவியுடன் சசிகலாவை கிரி காப்பாற்றுவார்.

gnanaparavai

ஆனால் சிவாஜி கணேசன் கிரியின் சாவை முன்கூட்டியே அறிந்து கொண்டு அவருக்கு எச்சரிக்கை செய்வார். ஆனால் அவரது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இருந்ததால் கிரி கடைசி நேரத்தில் உயிரை விட்டுவிடுவார். கிரியை காதலிக்கும் சசிகலா அவர் உயிர்விடும் கடைசி நிமிடத்தில் அவரை திருமணம் செய்து கொள்வார். அதன் பிறகு சோகத்துடன் படம் முடியும்.

தொண்ணூறுகளின் காலகட்டத்தில்தான் யாகவா முனிவர் என்பவர் பல அதிசயங்கள் செய்ததாக கூறப்பட்டது. அவர் ஒரு நபரை பார்த்தவுடன் அவரது எதிர்காலத்தை கணித்து சொல்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவரை தழுவிதான் இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

இந்த படத்தை ஏற்கனவே சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கிய வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews