பராசக்தியில் பக்கம் பக்கமாய் வசனம்.. ஆனால் நீதிமன்ற காட்சியில் வசனமே பேசாத சிவாஜி படம் எது தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி . அந்த படத்தின் கிளைமாக்ஸில் சிவாஜி கணேசன் பக்கம் பக்கமாய் வசனம் பேசுவார்.  இந்த வசனம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது. இந்த வசனத்திற்காகவே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சினிமாவுக்குள் நுழைய விரும்பும் பல நடிகர்கள் பராசக்தியின் நீதிமன்ற வசனத்தை பேசிக்காட்டி தான் வாய்ப்பு பெற்றதாக கூறுவார்கள். அப்படி பக்கம் பக்கமாய் தனது முதல் படத்தில் வசனம் பேசிய சிவாஜி கணேசன், ஒரு படத்தில் நீதிமன்ற காட்சியில் வசனமே பேசாமல், அதாவது எஸ், நோ என்ற இரண்டே இரண்டு வார்த்தை மட்டும் மட்டும் பேசி இருப்பார். ஆனால் அவரது கண்கள் பல பக்க வசனத்தை பேசி இருக்கும். அந்த படம் தான் அண்ணன் ஒரு கோயில்.

ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!

கடந்த 1977ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அண்ணன் ஒரு கோயில் வெளியானது. சிவாஜி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை, வசனத்தில் உருவான இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

annan oru kovil2

இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இன்றும் மல்லிகை முல்லை என்ற பாடல் வானொலி, தொலைக்காட்சியில் ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணன் ஒரு கோயில், குங்கும கோலங்கள், நாலுபக்கம் வேடர் உண்டு ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த படத்திற்கு ஆனந்த விகடன் ஊடகம் 53 மதிப்பெண்கள் கொடுத்து கொண்டாடியது. இந்த படத்தின் கதைப்படி போலீஸ் விரட்ட சிவாஜி கணேசன் ஓடிக்கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் மாமா மற்றும் அத்தை கொடுமையால் அவர்களிடம் இருந்து தப்பி சுஜாதா ஓடிக்கொண்டிருப்பார். இருவரும் ஏற்கனவே காதலர்கள். ஒரு புள்ளியில் சந்திப்பார்கள்.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

இந்த நிலையில் உங்களை ஏன் போலீஸ் துரத்துகிறது என்று சுஜாதா கேட்க, அதற்கு சிவாஜி என் தங்கையை மானபங்கபடுத்தியவனை கொலை செய்துவிட்டேன் என்று கூறுவார். இந்த நிலையில்தான் சிவாஜியின் தங்கை சுமித்ராவை காப்பாற்றும் ஜெய்கணேஷ் ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்வார்.

annan oru kovil1

சிவாஜி கணேசன் தங்கை சுமித்ராவுக்கு பழைய ஞாபகங்கள் மறந்து விடும். காவல்துறை ஒரு கட்டத்தில் சிவாஜி கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள். தனது தங்கை ஒரு நல்ல இடத்தில் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார் என்பதை அறிந்து சிவாஜி கணேசன் தங்கையை மானபங்கம் செய்தவனை தானே கொலை செய்ததாக ஒப்புக் கொள்வார். ஆனால் உண்மையில் கொலை செய்தது யார் என்ற சஸ்பென்சுடன் கிளைமாக்ஸ் முடியும்.

இந்த படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். குறிப்பாக தங்கையை அவர் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் காட்சி, நீதிமன்ற காட்சி ஆகியவை அவருடைய நடிப்புக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

இந்த படத்தில் சுமார் 10 நிமிடம் நீதிமன்ற காட்சி வரும். அதில் நீதிமன்ற கூண்டில் இருக்கும் சிவாஜி, எஸ், நோ என்ற இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும் தான் பேசுவார். ரசிகர்கள் இந்த காட்சியில் பராசக்தி போல் பக்கம் பக்கமாய் அவர் வசனம் பேசுவார் என்ற எதிர்பார்த்த நிலையில், இந்த கொலையை நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்விக்கு எஸ் என்றும், வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு நோ என்றும் பதில் கூறுவார். இந்த வழக்கு முடிவதற்கு முன் உண்மையில் கொலை செய்தது யார் என்பது தெரிய வரும்போது ரசிகர்களுக்கு அது திடுக்கிடும் திருப்பமாக இருக்கும்.

தங்க சுரங்கம்: சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி திரைக்கதை..!

பாசமலர் படத்திற்கு பிறகு அண்ணன், தங்கை பாசத்தை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்திய படம்தான் அண்ணன் ஒரு கோயில். இந்த படத்தை இப்போது பார்த்தாலும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews