பத்து நிமிடத்தில் உருவான சிறு பொன்மணி அசையும் பாடல் உருவான கதை!

1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கல்லுக்குள் ஈரம். நிவாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பாரதிராஜா அருணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். திரைப்படத்தின் பாடல்களை கங்கை அமரன் மற்றும் முத்துவேந்திரன் ஆகியோர் எழுதியிருப்பார்கள். இப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இன்றும் அனைவரது பிடித்தமான பாடல்கள் லிஸ்டில் இந்த படத்தின் பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்.

அந்த வகையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புதுசையும்… இந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கங்கை அமரன். இளையராஜா இசையமைக்க எஸ் ஜானகி தனது காந்த குரலால் பாடி அசத்தியிருப்பார். 1979 ஆம் ஆண்டு சென்னை ஹோட்டல் ஒன்றில் ராஜா அவர்கள் 10 நிமிடத்தில் ஒரு டியூன் போட்டு விடுகிறார். பின்னர் கங்கை அமரன் அவர்களை அழைத்த இந்த டியூனுக்கு 10 நிமிடத்தில் எனக்கு பாடல் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பத்து நிமிடத்தில் பாடல் வரிகளால் என்று கேட்டு பின்னர் சரி என்று கூறிவிட்டு 10 நிமிடத்தில் பாடல் எழுதுகிறார் கங்கை அமரன்.

அந்த பத்து நிமிடத்தில் அழகான தமிழில் அருவி போல பாடலை கொடுத்தார் கங்கை அமரன். இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் வரிகளையும் இசை ஞானி இசையையும் கேட்டு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. இசைஞானி இளையராஜா இசையில், கங்கை அமரன் மனதை மயக்கும் வரிகளில், எஸ். ஜானகியின் தேனிலும் இனிய குரலில் கல்லுக்குள் ஈரம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் என்றென்றும் நிலைத்திருக்கும். மொத்தத்தில் அழகான தமிழ் வரிகளில் அற்புதமான இசையில் மெய்மறக்க வைக்கும் பாடல் தான் சிறு பொன்மணி அசையும் பாடல்.

அப்படிப்பட்ட கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜா நடித்தது பற்றிய அனுபவத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் கோபம் வரும் இப்பொழுது நிறைய பக்குவப்பட்டு விட்டேன். அப்பொழுது கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. நிவாஸிற்கு சிக்கனமாகவும் படம் எடுக்க வேண்டும். அந்த படத்தில் மிகவும் கோபக்காரனாக இருப்பேன். சலவைக்கார பெண்ணாக அருணா நடித்திருப்பார்.

முதல் படத்திலேயே சிவாஜியுடன் நடித்த பார்த்திபன்! சிவாஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை…

என் சட்டையை பார்த்தாலே மிரண்டு போவார், படத்தில் நடிகையாக நடிக்கும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் உதவி செய்யும் பாடல். அதை கற்பனையாக அருணா நினைத்துக் கொண்டே இருப்பார், வருவார், நடப்பார் என் அறைக்கு வந்து துணிகளை மடித்து விட்டு செல்வார் அதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்போது துணிக்கு மேலே ஒரு பூவை வைத்துவிட்டு போவார். நான் பார்த்துவிட்டு ஜன்னலை பார்ப்பேன், உடனே அருணா கேரக்டர் உன் பெயர் என்னம்மா என்று கேட்பேன் பதில் சொல்லாமல் சென்று விடுவார் இது படத்தின் தொடக்க காட்சிகளில் ஒன்று.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...