முதல் படத்திலேயே சிவாஜியுடன் நடித்த பார்த்திபன்! சிவாஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை…

Sivajisivajisssதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஆர்.பார்த்திபன் அவர்களும் ஒருவர். வித்தியாசமான கதைக் களங்களை கொடுப்பதே இவரின் தனித்துவம் ஆகும். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகர், வில்லன் என பல கதாபாத்திரங்களில் ரசிகர்களை மகிழ்விக்க கூடியவர். அதிலும் இவர் வடிவேலுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது.

இப்படிப்பட்ட பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களான ஒத்த செருப்பு, இரவின் நிழல் இந்த திரைப்படங்கள் பெரிதும் மக்கள் மனதை கவர்ந்தது. மூன்று தேசிய விருதுகளை வாங்கி குவித்த பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதை கவர்ந்த பார்த்திபன் முதல் முதலாக அவரின் குருநாதர் ஆன பாக்கியராஜ் இயக்கிய தாவணி கனவுகள் மூலமாக சினிமாவில் அடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடித்த போது ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பார்த்திபன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

பாக்கியராஜ் எழுதிய இயக்கிய தாவணி கனவுகள் திரைப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். ஐந்து தங்கை மற்றும் ஒரு தாயுடன் வேலையில்லாமல் தவிக்கும் அண்ணன் பட்டதாரி ஆக பாக்கியராஜ் நடித்திருப்பார். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் மிலிட்டரி மேன் ஆக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் தான் பார்த்திபன் முதல் முறையாக திரையில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

பொன்னுச்சாமி என்னும் தபால்காரர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்வார். முதல் படத்திலேயே சிவாஜி கணேசன் அவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியது, அந்த படத்தில் நடிக்கும் பொழுது முதல் காட்சியே சிவாஜி கணேசன் உடன் ஒரு பெரிய வசனம் கூறுவது போல அமைந்திருக்கும். அப்போது சிவாஜி கணேசன் பார்த்திபனை அழைத்து இந்த வசனத்தை நன்கு மனப்பாடம் செய்து கொள்ளும்படி கூறினார்.

பாடகர் எஸ்.பி.பிக்கு இப்படி ஒரு ஆசையா.. நிறைவேறாமல் போனது எப்படி?

ஏனென்றால் அந்த காட்சியில் பார்த்திபன் வசனம் பேசி முடித்ததும் சிவாஜி அவர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்குவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு வேலையை பார்த்திபன் வசனத்தை தவறாக கூறினால் அடுத்த காட்சி எடுப்பதற்கு மூன்று நான்கு மணி நேரங்கள் கூட ஆகலாம் என்பதால் சிவாஜி பார்த்திபனை அழைத்து நன்கு மனப்பாடம் செய்து கொள்ளும்படி கூறினார். அதன்படி பார்த்திபன் அந்த வசனத்தை ஒரே சாட்டில் பேசி முடித்துள்ளார். அந்த காட்சி நல்ல முறையில் படமாக்கப்பட்டது.

அதன் பின் நடிகர் திலகம் சிவாஜி பார்த்திபனை அழைத்து வசனம் சிறந்த முறையில் பேசியதாக கூறி நீ நாடகக் கலைஞனா என்று கேள்வி கேட்டார். அதற்கு பார்த்திபன் ஆமாம் ஐயா என்று பதில் கூற அதனால் தான் இது சாத்தியமாயிற்று என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார். சிவாஜி அவர்கள் வாயால் கூறிய அந்த வாழ்த்துக்களை தனக்கு பல விருதுகளுக்கு சமம் என பார்த்திபன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews