இளையராஜா எல்.ஆர். ஈஸ்வரியை ஒதுக்கிய காரணம் இதானா? இருந்தும் பாட வைத்த ஒரே ஒரு பாட்டு!

தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்களை இளையராஜா தனது இசையில் பாட வைத்தாலும் மூத்த கலைஞரான பிரபல பாடகர் எல்.ஆல். ஈஸ்வரியை மட்டும் இவர் பயன்படுத்தவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்றோரின் இசையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்டோரின் படங்களுக்கு துள்ளலான பல பாடல்களைப் பாடியவர் ஏனோ இளையராஜாவின் இசையில் மட்டும் ஒரே ஒரு பாடலைத் தவிர வேறேதும் பாடவில்லை.

இதுகுறித்து கங்கை அமரன் ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது, “அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தம்பி, தம்பி என்று எல்.ஆர்.ஈஸ்வரி இளையராஜாவுடன் அன்போடு பழகுவாராம். இளையராஜாவை விட நான்கு வயது மூத்தவர். சிறு வயதில் அவர்கள் ஊரில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதைப் பார்க்க இளையராஜா மற்றும் சகோதரர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் போய்க் காத்திருந்ததை எல்லாம் குறிப்பிட்டார்.

இளையராஜாவின் இசை பாணிக்கு எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடும் ஸ்டைல் பொருந்தாது என்பதால் மட்டுமே அவரைப் பாட அழைப்பதில்லையாம். இருவரிகளுக்கிடையே ஆ, ஓ, ஊ, ஆஹா, ஆங், ம்ம், போன்ற சப்தங்களெல்லாம் சேர்க்கவேண்டுமல்லவா ?

எல்.ஆர்.ஈஸ்வரி பாடும்போது அது கொஞ்சம் ஓவர்டோஸாக ஆவதுபோல் இருப்பதால் இளையராஜா பாணி பாடல்களுக்கு அது பொருந்துவதில்லை என்பது அவர் கருத்து.“ இதனால் தான் இளையராஜா எல்.ஆர்.ஈஸ்வரியை பாட அழைத்ததில்லை என்ற தகவல் உண்டு.

என்னது இந்தப் பாட்டுக்கெல்லாம் இசையே கிடையாதா..? பின்னணி இசையே இல்லாமல் ஹிட் ஆன பாடல்கள்

இருந்த போதிலும் எல்.ஆர்.ஈஸ்வரி ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார் இளையராஜா இசையில். இன்றும் எங்கு சந்தித்தாலும் ஓடி வந்து இளையராஜாவிடம் அன்புடன் பேசுவாராம். இளையராஜாவிற்கு எல்.ஆர்.ஈஸ்வரிமீது மிகுந்த அன்பு உண்டாம்.

இளையராஜா இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அந்த ஒரே ஒரு பாடல் எதுவென்றால் நல்லதொரு குடும்பம் என்ற படத்தில் ஒன்.டு.த்ரீ என்று ஆரம்பிக்கும் அந்த ஒரே பாடல் மட்டுமே.

ஆனால் பி.சுசீலா இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரும் இளையராஜா இசையில் சில பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் துறுதுறுப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் துள்ளலிசை பாடல்களைப் பாடும் எல்.ஆர். ஈஸ்வரியை மட்டும் இளையராஜா புறக்கணித்தது இசை உலகிற்கு இழப்பு என்றே சொல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews