சிம்மம் மே மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 9ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 7 ஆம் இடத்தில் உள்ளார்.

குருவின் பார்வையும் சனியின் பார்வையும் சிம்மத்தின்மீது விழுகின்றது. சனிபகவானின் பார்வை உங்களைச் சோதித்தாலும் குரு பகவானின் பார்வை அதில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை திடீர் யோகங்கள் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் அதிர்ஷ்டங்கள் அடிக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன்கள் அமையும். இதுவரை இருந்துவந்த தடங்கல்கள், தாமதங்கள் அனைத்தும் சரியாகும்.

கணவன்- மனைவி இடையே இருந்த சங்கடங்கள், பிரச்சினைகள் சரியாகும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு விரைவில் நற்செய்தி கிடைக்கப் பெறும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்களைப் பொறுத்தவரை எதிர்காலம் குறித்து சிறப்பாகத் திட்டமிடலாம். உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையப் பெறும்.

உங்களின் குறிக்கோளை நீங்கள் அடைவீர்கள், எதிர்பார்த்த பொருளாதார ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கப் பெறும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை உறவினர்களால் குடும்பத்தில் பெரும் தொந்தரவுகள் ஏற்படும். மேலும் மூன்றாம் நபர்களின் பேச்சினைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.