சிம்மம் மார்கழி மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை பைரவர் வழிபாடு மற்றும் குரு பகவான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தினைப் பல வகைகளிலும் கொடுக்கும். விநாயகர் வழிபாட்டினை ஒவ்வொரு வாரமும் செய்து வருதல் வேண்டும்.

பிள்ளைகள் விஷயத்தில் கோப, தாபங்கள் வேண்டாம். உங்களால் பெற்றோர்கள் அல்லது பெரியவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில் சார்ந்த வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் தொழில் ரீதியாக மிகச் சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

வேலை நிமித்தமாக சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையப் பெறும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் தரும் விஷயங்கள் நடக்கப் பெறும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் தொற்றுநோய்களால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் ஏற்படும்; குழந்தைகளின் உடல் நலனில் சிறிதளவு அக்கறை தேவை. குழந்தைகளுக்கு உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலான உணவுகளை அதிகமாகக் கொடுங்கள்.

காது, மூக்கு, தொண்டை சார்ந்து சிறு சிறு தொற்று வியாதிகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லது. தினசரிக்கும் உடற் பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றினைச் செய்யுங்கள்.

தொழிலில் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யாமல் சிறுசிறு முதலீடுகளைச் செய்யுங்கள். வாடிக்கையாளர்கள் தொழில்ரீதியாக அதிகரிப்பர்; ஆனால் கூட்டுத் தொழில் செய்து வருவோருக்கு சிறு சிறு பிரச்சினைகள் தொழிலில் இருந்து கொண்டே இருக்கும்.

வேலைரீதியாக எடுத்துக் கொண்டால் வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும்.

பெற்றோரின் உடல் நலன் ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை என்று பார்க்கையில் கணவன்- மனைவி என்று பார்க்கையில் சிறு சிறு வாக்குவாதங்கள் பெரிய அளவிலான பிரச்சினைகளாக உருவெடுக்கும்.

உடன் பிறந்தோர்களுடன் இருந்த பிரச்சினைகள் ஓரளவு சரியாகி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.