சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை 12 ஆம் இடத்தில் சுக்கிர பகவானும்- செவ்வாய் பகவானும் இணைந்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்புரீதியாக எந்தவொரு புது முயற்சி, புது முடிவுகள் எதையும் எடுக்காமல் இருத்தல் வேண்டும்.

புது முயற்சிகளை எடுக்கும்பட்சத்தில் முடிவுகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்காது. மேலும் இது அலைச்சல்களைக் கொடுத்தாலும், இதன் மூலம் நீங்கள் அனுபவம் பெறுவீர்கள்.

தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்யும் முடிவு இருந்தாலோ புதுத் தொழில் துவங்கும் எண்ணம் இருந்தாலோ அந்த எண்ணத்தை அப்படியே தற்போதைக்கு மூட்டை கட்டி வைத்துவிடுங்கள்.

புதன் ஜூன் மாதம் இரண்டாம் பாதியில் ரிஷபத்திற்குப் பெயர்கிறார். திருமண காரியங்களைப் பொறுத்தவரை பெரிய அளவில் தடை நீடிக்கும். மேலும் வரன் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் அமையாது.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மூன்றாம் நபர்களின் தலையீட்டால் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் தற்போதைக்கு இருவரும் பிரிந்து இருப்பதே நல்லது.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புரிதல் கொஞ்சமும் இன்மையால் பேசும் வார்த்தைகள் தடித்து இருக்கும்; இது மிகப் பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை புதனின் இடப் பெயர்ச்சி புதிதாக எடுக்கும் முயற்சிகளுக்குத் துணையாக இருக்கும். ஆனால் கல்விரீதியாக செலவு நீங்கள் எண்ணிராத அளவில் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை மன அளவிலான பிரச்சினைகள் உடல் பாதிப்பினை ஏற்படுத்துவதாக இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.