சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை எந்தவொரு புது முயற்சியினைச் செய்யும்போதும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலைப்பளு இருப்பதாய் உணர்வீர்கள். மேல் அதிகாரிகளுடன் முரண்பாடு, வாக்குவாதம் இருக்கும்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு அனைத்தும் தள்ளிப் போகும். திருமண காரியத்தினைப் பொறுத்தவரை வரன்கள் தட்டிப் போகும்; எதிர்பார்ப்புகளை ஓரளவு குறைத்துக் கொண்டு வரன் தேடுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தொழில்ரீதியாக புது முயற்சிகளைச் செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் நல்லது. மேலும் தொழில் அபிவிருத்தி செய்ய நினைத்தாலோ, புதுத் தொழில் துவங்க நினைத்தாலோ கூட்டுத் தொழிலாகத் துவக்காமல் இருத்தல் நல்லது.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மிகவும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள், மேலும் நினைத்ததை பிடிவாதமாகச் செய்து முடித்து வெற்றி காண்பார்கள்.

போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வருவோர் மிகவும் உத்வேகத்துடன் படிப்பர். சனி பகவானின் பார்வை செவ்வாய் மீதும் செவ்வாய் பகவானின் பார்வை சனி பகவான் மீதும் விழுகின்றது. உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை விரயச் செலவுகள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குடும்ப வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் மூன்றாம் நபர்களின் தலையீட்டால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews