சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை வலுவான இடத்தில் சூர்ய பகவானின் இட அமைவு உள்ளது. ராசிநாதன் சூர்ய பகவான் செவ்வாய் பகவானுடன் இணைந்து ராஜ யோகத்துடன் உள்ளார். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தில் உள்ளார்.

தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். 9 ஆம் இடத்தில் குரு பகவான் இட அமர்வு செய்துள்ளார், குருவை சுக்கிரன் பார்வையிடுகிறார். சுக்கிர பகவானை குரு பகவான் பார்வையிடுகிறார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சுக்கிர பகவான்- குரு பகவான் பார்வை பரிவர்த்தனை உங்களுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும், சனி பகவான் 7 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். ராகு- கேது என்று பார்க்கையில் 2 மற்றும் 8 ஆம் இடத்தில் கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் நீங்கள் தீட்டங்களை வகுத்து அதற்கேற்பச் செயல்படுங்கள். ராகு- கேது என்ற இரண்டு கிரகங்களைத் தவிர்த்து பிற கிரகங்கள் எதுவும் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ராகு பகவானின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாக்குக் கொடுக்கும் போது மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். எந்தவொரு முடிவினை எடுக்கும் போதும் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவினை எடுக்கவும்.

நீங்கள் பிறருக்காக எந்த முடிவினை எடுத்தாலும் கேது பகவான் இடையூறுகளை ஏற்படுத்துவார். உங்களுக்காக நீங்கள் எடுக்கும் முடிவுகளில் பெரிதளவில் பாதிப்புகள் இல்லை.

ராகு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து குழப்பங்களை ஏற்படுத்துவார். தேவையில்லாத சிந்தனைகள், மனக் கவலைகள் போன்றவை ஏற்படும். கோவில் வழிபாடு செய்தல், தியானம் செய்தல் போன்ற விஷயங்களைச் செய்து உங்களை நீங்கள் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியங்கள் என்று கொண்டால் ராகு- கேது இல்லாத ஜாதகங்களைத் தேர்வு செய்யுங்கள்; மேலும் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.