கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

குரு பகவான்- சனி பகவான் வக்ரம் அடைந்துள்ளதால் மாதத்தின் துவக்கம் கேளிக்கை ரீதியாக அதிக செலவுகள் ஏற்படும். மேலும் இது சிலருக்கு ஆதாயத்தை ஏற்படுத்தினாலும், பலருக்கும் அலைச்சலை ஏற்படுத்துவதாக அமையும்.

சூரியன் கடகத்திலேயே இருப்பதால் தொழில்ரீதியாக மிகச் சிறந்த லாபத்தினை எதிர்பார்க்கலாம். மேலும் வெளிநாடு செல்ல முயற்சிகள் மேண்டுகொண்டபவர்களுக்கு இது சிறப்பான பலன் தரும் காலகட்டமாக இருக்கும்.

மேலும் நேர்மறையான விஷயங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை ராகு, கேது, சனி பகவான் இடையூறு இல்லாததால் குடும்ப உறவுகள் வலுப்பெற்று காணப்படும்.

திருமணம் சார்ந்த காரியங்கள் செய்ய நினைப்போருக்கு கைகூடும் காலமாக இருக்கும். எதிர்கால வாழ்க்கை குறித்த திட்டமிடலுக்கு ஏற்ற காலகட்டமாக இது நிச்சயம் இருக்கும்.

மேலும் உடல் நலன் சார்ந்த விஷயங்களில் கேதுவின் பார்வையால் வயிறு சார்ந்த பிரச்சினைகள், ஜீரணக் கோளாறுகள், எரிச்சல் ரீதியான பிரச்சினைகள், எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை படிப்புரீதியாக கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள். வண்டி, வாகனங்கள் வாங்கும் சூழ்நிலைகள் ஏற்படும். வீடு சார்ந்த இடமாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews