வெளிநாட்டில் களமிறங்கும் தளபதி விஜய்! ‘லியோ’ ஆடியோ மற்றும் டிரைலர் குறித்து மாஸ் அப்டேட்!

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் வெளியீட்டிற்கு முன்பே இயக்குனர் லோகேஷ் – விஜய் கூட்டணி குறித்த அறிவிப்புகள் அதிகார பூர்வமாக வெளிவரத் தொடங்கியது. இவர் கூட்டணியில் முதலில் வெளியான மாஸ்டர் படத்தின் ஹிட்டை தொடர்ந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எகிற செய்துள்ளது.

மேலும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அனிருத் இசையமைத்த நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால் படத்தில் 20க்கும் அதிகமான முன்னணி இந்திய பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும், அன்று ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் மாஸாக வர உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்பொழுது கசியத் தொடங்கியுள்ளது. முன்னதாக மதுரையில் செப்டம்பர் 29 அல்லது 30 ஆம் தேதி ஒரு பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.

இணையத்தில் அசுர சாதனை படைத்த ரஜினியின் காவாலா!

ஆனால் தற்போது படக்குழு மலேசியா அல்லது துபாயில் போன்ற வெளிநாடுகளில் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று மாலை 6.07 மணிக்கு லியோவின் டீசர் அல்லது டிரெய்லர் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...