சங்கடத்தில் நெளிந்த ரஜினி.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சிவாஜி!

சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பு முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருநெல்வேலி நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ராணா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து மூன்று மாத இடைவேளைக்கு பின் நடிகர் ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை ஏப்ரல் மாதம் துவங்கும் என்று சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த படத்தின் கதை உருவாக்கத்தில் இயக்குநர் லோகேஷ் தற்பொழுது விறுவிறுப்பாக ஈடுபட்டு வருவதாகவும் இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து இளம் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் ஜீவன் என பலர் நடிக்க இருப்பதாகவும் அடுத்தடுத்த தகவல் வெளியாகி வருகிறது. எல் சி யு கான்செப்ட் இல்லாமல் புதுவிதமான கதைக்களத்தை கொண்டு ரஜினி படம் உருவாகி வருவதாக சமீபத்தில் லோகேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது 72 ஆவது வயதிலும் அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ரஜினி தனது தொடக்க காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி, எம்ஜிஆர் போன்ற பெரிய நட்சத்திரங்களை பார்த்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திரைத்துறைக்கு வந்துள்ளார். மேலும் நடிகர் திலகம் சிவாஜி உடன் இணைந்து ரஜினி ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் சிவாஜி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த பொழுதும் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களையும் நல்ல மரியாதையில் நடத்தும் பண்புள்ளம் கொண்டவர். அந்த வகையில் சிவாஜியின் படங்களில் நடிக்கும் ரஜினிக்கு அவர் நல்ல மரியாதை கொடுத்து வந்துள்ளார். மேலும் ரஜினியின் வளர்ச்சியை பார்த்து அவ்வபோது மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.

விஜய்யை நேரில் பார்க்க கேரவன் முன் காத்திருந்த அஜித்! அதன்பின் நடந்த அதிரடி!

அந்த அளவிற்கு நடிகர் சிவாஜிக்கும் நடிகர் ரஜினிக்கும் இடையே ஆன உறவு அப்பா மகன் போல புனிதமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் ரஜினி மற்றும் சிவாஜிக்கு இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. நடிகர் ரஜினி ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக விமான நிலையம் சென்றுள்ளார். அப்பொழுது அதே நேரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களும் அந்த விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரஜினியின் ரசிகர்கள் ரஜினியை பார்த்து சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் என கோஷம் எழுப்ப தொடங்கியுள்ளனர். நடிகர் சிவாஜி கணேசன் இருக்கும் பொழுது தன்னுடைய ரசிகர்கள் தன்னை மட்டும் புகழ்ந்து கூறுவதை பார்த்த ரஜினிக்கு கூச்சத்தில் என்ன செய்வது என தெரியாமல் ரசிகர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என ஓடி ஒழிய தொடங்கியுள்ளார்.

அதை கவனித்த நடிகர் திலகம் ரஜினி அழைத்து ஏன் இப்படி செய்கிறாய் எனக் கூறி இது உன்னுடைய காலம் உன்னுடைய ரசிகர்கள் உன்னை பிடித்து தான் பாராட்டி வருகின்றனர் அதை ஏற்றுக்கொள். இங்கு எதுவும் நிரந்தரமல்ல இருக்கும் பொழுதே இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த பாராட்டுக்கள் தான் மீண்டும் மீண்டும் உன்னை நல்ல படைப்புகளை உருவாக்க ஊந்துகோளாக இருக்கும் என்று அறிவுரையும் கூறியுள்ளார். அந்த நேரத்தில் சிவாஜி மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் சக நடிகர்களின் வளர்ச்சியை எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியை சான்றாக அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.