மெரினாவுக்கு முன்பே சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க முயற்சித்த இயக்குனர்!! யார் இந்த செம்புலி ஜெகன்?

செம்புலி ஜெகன் ‘ஆராரோ ஆரிரரோ’ முதல் சொக்கத்தங்கம் வரை இயக்குனர் கே.பாக்யராஜிடம் பணிபுரிந்தவர். அதோடு பல படங்களில் காமெடியனாகவும் நடித்திருப்பார். அவருடைய நடிப்பு நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். கெஜனுக்கு சிறுவயதில் படங்களை பார்த்து அதன்மூலம் ஏற்பட்ட தாக்கத்தால், சினிமாவில் சேர வேண்டுமென்ற ஆசை வந்தது.

‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தை பார்த்ததும் ஒரு மாடர்ன் சினிமாவை கே.பாக்கியராஜ் அறிமுகப்படுத்தியதாக உணர்ந்தார் ஜெகன். அவரை மானசீக குருவாக மனதிற்குள் நினைத்து கொண்டார். அவரிடமே உதவி இயக்குனராக சேரவேண்டுமென்று முடிவு செய்தார். கே.பாக்கியராஜ் சினிமாவில் பிசியாக இருந்த சமயம் என்பதால், அவரிடம் உதவி இயக்குனராக சேர்வது எளிதான காரியமல்ல. நீண்ட நாள் முயற்சியின் பலனாக பாக்யராஜை சந்திக்கும் வாய்ப்பு ஜெகனுக்கு கிடைத்தது.

ஏற்கனவே தன்னிடம் 20 பேருக்கும் மேல் அசிஸ்டெண்டாக இருப்பதால் உன்னை சேர்ப்பது கடினம் என ஜெகனிடம் கூறி இருக்கிறார் பாக்கியராஜ். ஒரு வருடம் கழித்து மீண்டும் வா பார்க்கலாம் என பாக்கியராஜ் கூற அதற்கு ஜெகன் ஒருவருடம் கழித்து வந்தால் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு மேல் காத்திருந்து விட்டேன் இதற்கு மேல் காத்திருக்க முடியாது. என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூற பாக்கியராஜூம் சேர்த்துக் கொண்டார். இதற்கிடையில் வேறு டைரக்டர்களிடம் பணிபுரிந்தாலும், பாக்கியராஜிடம் சேர வேண்டுமென்பதே ஜெகனின் குறிக்கோளாக இருந்தது. அதற்கான முயற்சியில் வெற்றியும் பெற்றார்.

கே.பாக்கியராஜூக்கு ஆஸ்தான உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜெகன் வசனம், திரைக்கதை என எல்லாவற்றிலும் பங்காற்றி இருக்கிறார். பாக்கியராஜ் இயக்கி நடித்த படம் ‘ராசுக்குட்டி’ இந்த படத்தில் செம்புலி என்ற கதாபாத்திரத்தில், ஜெகன் நடித்திருப்பார் இந்தபடத்திற்கு பின்பே செம்புலி ஜெகன் என அழைக்கப்பட்டார். கே.பாக்கியராஜ் இயக்குனராக வெற்றி கண்ட கடைசி படம் ‘சொக்கத்தங்கம்’.

விஜயகாந்த், செளந்தர்யா நடித்த இந்தப்படம் மாபெரும் ஹிட் ஆனது. இந்தப்படத்தில், பிரகாஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். முதலில் அந்த கேரக்டருக்கு சீமானையும், கரணையும் தான் பரிந்துரை செய்தாராம் பாக்கியராஜ். ஆனால், ஜெகன் தான் இந்தப்படத்திற்கு பிரகாஷ் ராஜ் பொருத்தமாக இருப்பார் என கூறியிருக்கிறார். ஜெகனின் தேர்வு சொக்கத்தங்கம் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது பார்த்து மிகவும் பாராட்டினாராம் பாக்கியராஜ்.

நீண்ட காலத்திற்கு பின் உதவி இயக்குனரில் இருந்து, இயக்குனராக முயற்சித்தார் ஜெகன். இருந்தாலும் அந்த முயற்சிகள் எதுவும் கை கூடவில்லை. படம் இயக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்த போது, ஹீரோவாக புது முகத்தை தேடி இருக்கிறார்கள். அப்போது, அது இது? டிவி ஷோவை பார்த்த ஜெகனுக்கு சிவகார்த்திகேயனை பிடித்து போய் இருக்கிறது. சிவகார்த்திகேயனை அணுகி இருக்கிறார்கள் அவரும் சம்மதித்திருக்கிறார்.

sivakarthikayen and sembuli jagan

அந்த சமயத்தில் மெரினா படம் கூட வெளிவரவில்லை. அப்போதே ஜெகன், சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்று போய்விட்டது. இதனால் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பு ஜெகனுக்கு கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு செம்புலி ஜெகன் நடித்திருக்கும் படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews