ஆப்பிளை அடுத்து இந்தியாவில் பிரத்யேக ஷோரூம்களை திறக்கும் சாம்சங்.. எங்கே தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் டெல்லி மற்றும் மும்பையில் தனது பிரத்யேக ஷோரூம்களை திறந்தது என்பதும் இதனால் அந்நிறுவனத்திற்கு நல்ல வர்த்தகம் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சாம்சங் நிறுவனமும் இந்தியாவின் பல இடங்களில் ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே டெல்லியில் சாம்சங் நிறுவனத்தின் பிரத்தியேக ஷோ ரூம் இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் ஷோரூம்களை திறக்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 3500 சதுர அடி பரப்பளவில் அமைக்க இருக்கும் இந்த ஷோரூம் திறப்பு விழா மிக விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத் ஷோரூமில் ஸ்மார்ட்போன்கள், டிவிக்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட சாம்சங் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும், அதேபோல் வாடிக்கையாளர்கள் விரும்பும் 8K டிவி மற்றும் அதன் Bixby குரல் உதவியாளர் போன்ற Samsung நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பத்தையும் இந்த ஷோரூமில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் இந்தியாவின் பிரத்யேக பிராண்ட் கடைகளின் தலைவர் ராகுல் சிங் தெலுங்கானாவில் அமைய இருக்கும் ஷோரூம் குறித்து கூறியபோது, ’ஹைதராபாத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஒரு நல்ல அனுபவத்தை கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், புதிய ஸ்டோர் சாம்சங்கிற்கு கணிசமான வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தெலுங்கானாவில் உள்ள புதிய சாம்சங் பிரீமியம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரின் சில முக்கிய அம்சங்கள் இதோ:

* சாம்சங் நிறுவனத்தின் மிகப்பெரிய பிரீமியம் ஷோரூம்

* இது 3,500 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளது.

* ஸ்மார்ட்ஃபோன்கள், டிவிக்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட சாம்சங் தயாரிப்புகளை இங்கே வாங்கலாம்.

* தெலுங்கானாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் சாம்சங் திட்டங்களின் ஒரு பகுதியாக புதிய ஷோரூம் திறக்கப்படவுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews