Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போனில் இத்தனை சிறப்பம்சங்களா? விலை என்ன தெரியுமா?

மொபைல் போன் உற்பத்தியில் இன்னும் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருக்கும் நிறுவனம் சாம்சங் என்பதும் இந்நிறுவனத்தின் ஒவ்வொரு மாடலும் உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பு அம்சங்கள், விலை ஆகியவற்றை தற்போது பார்ப்போம்.

Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போன் Exynos 1330 octa-core பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 90Hz அம்சத்துடன், 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பு 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 13 மெகாபிக்சல் செல்பி கேமிராவும் உள்ளது.

Samsung Galaxy M14 5G ஆனது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. கைரேகை சென்சார் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

Samsung Galaxy M14 5Gயின் சிறப்பம்சங்களை சுருக்கமாக தற்போது பார்ப்போம்,.

* 6.6-இன்ச் FHD+ (2408 x 1080 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே
* Exynos 1330 octa-core பிராஸசர்
* 4 ஜிபி, 6 ஜிபி ரேம்
* 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50-மெகாபிக்சல் பிரதான சென்சார், 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் பின்புற கேமிராக்கள்
* 13 மெகாபிக்சல் சென்சார் செல்பி கேமிரா
* 6000mAh பேட்டரி, 15W வேகமாக சார்ஜிங் செய்யும் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
* 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி
* கைரேகை சென்சார், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், திசைகாட்டி
* 165.1 x 76.4 x 9.1 மிமீ அளவு
* 205 கிராம் எடை

இந்தியாவில் Samsung Galaxy M14 5G விலையானது 4ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ,.13,990 என விற்பனையாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews