ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கு.. நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் விதித்த நீதிமன்றம்..!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு 300 ரூபாய் நீதிமன்றம் அபராதம் விதித்த தகவல் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விமல் என்பதும் அவர் தற்போது மூன்று படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காசோலை மோசடி வழக்கில் சிக்கிய நிலையில் இது குறித்து வழக்கு என்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மன்னார் வகையறா என்ற திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் ரூபாய் 4.5 கோடி கடன் வாங்கி இருந்ததாகவும் அதற்கு அவர் கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

vimalஇந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போது மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான முதல் சாட்சியின் விசாரணை முடிந்தது. ளி இதனை அடுத்து விமல் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற இருந்த நிலையில் விமல் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில்  விமல் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வழக்கை காலதாமதப்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கு செலவாக ₹300 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் விமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏப்ரல் 25ஆம் தேதி விமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காசோலை மோசடி வழக்கில் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் அந்த தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews