வருடத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை, சம்பளம் ரூ.1 கோடி.. என்ன வேலை தெரியுமா? வைரல் வீடியோ..!

வருடத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்றும் அந்த நான்கு நாட்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படும் வேலை ஒன்றின் விளம்பரம் டிக் டாக் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வேலையில் சேர்ந்து அந்த வேலையில் படிப்படியாக முன்னேறி பதவி உயர்வு பெற்று ஒரு கோடி சம்பளம் பெறுவது என்பது கனவில் கூட நடக்க முடியாத ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் வருடத்திற்கு நான்கு நாள் மட்டும் வேலை செய்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறும் வேலை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.

ஆம் அமெரிக்காவில் உள்ள சவுத் டக்கோட்டா என்ற பகுதியில் உள்ள மிகப்பெரிய டவரின் மேல் இருக்கும் பல்பை மாற்ற வேண்டும் என்பதுதான் அந்த வேலை. சுமார் 600 மீட்டருக்கு மேல் உயரம் இருக்கும் இந்த சிக்னல் டவரில் உள்ள பல்பை ஆறு மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்ற வேண்டும். மொத்தத்தில் வருடத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். இதற்காக சம்பளம் ஒரு கோடி ரூபாய் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தில் ஏறி விளக்கை மாற்றுவது என்பது நம்ப முடியாத ஒரு ஆபத்தான விஷயமாகும். ஏனெனில் இந்த கோபுரத்தின் உச்சிக்கு செல்வதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும், அதேபோல் பல்பை மாற்றிவிட்டு திரும்ப ஒரு மூன்று மணி நேரமாகும், மொத்தம் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

கோபுரத்தின் மொத்த உயரம் 600 மீட்டர் என்ற நிலையில் உச்சிக்கு செல்லும் போது 100 மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மின் விளக்கை மாற்றும் பணி என்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்த வேலை குறித்த விளம்பரம் டிக் டாக் செயலியில் வெளியாகி உள்ள நிலையில் இதுவரை யாருமே விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு கோடி சம்பளம் என்றாலும் 600 மீட்டர் உயரத்தில் ஏறி பல்பை மாட்டும் வேலை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே ஆகும். இருப்பினும் ஒரு சிலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews