ரிஷபம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

ரிஷப ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 10 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். அதேபோல் ராகு பகவான் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

சனி பெயர்ச்சியுடனான குரு பெயர்ச்சி பலவிதமான ஆதாயப் பலன்களைக் கொடுப்பதாய் இருக்கும். குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு வந்தால் சகல நன்மைகள் வாழ்க்கையில் ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை; முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உடல் தொந்தரவு இல்லாதபட்சத்தில் மன அழுத்தம் ஏற்படும்.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் இருக்கும் தொழிலை விட்டு வேறு தொழிலைத் துவக்க வேண்டாம். வேற்று மொழி மனிதர்களால் பலவகைகளிலும் ஆதாயப் பலன்கள் ஏற்படும். இட மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம் அனுகூலம் நிறைந்த மாற்றங்களாக இருக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் அனைத்துவிதமான அனுகூலங்கள் காணப்படும், கடந்த காலங்களில் பிள்ளைகள் உங்களைக் கஷ்டப்படுத்திய நிலையில் தற்போது உங்களைப் புரிந்து கொள்வர்.

உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபச் செய்திகள், சுப காரியங்கள் போன்ற விஷயங்களுக்குக் குறைவே இருக்காது. வேலை சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது குடும்ப ஜோசியக் காரரை கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பது நன்மை பயக்கும்.

பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யும் போது கவனம் தேவை. சனி பகவானின் அருக்கடாட்சம் உங்களுக்கு நிச்சயம் உண்டு. ஜென்மத்தில் குரு பகவான் இருக்கும் போது மிகக் கவனம் தேவை. குருவின் இடப் பெயர்வின் போது தவறான முடிவினை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

ஒரு வேலையில் இருக்கும்போதே மற்றொரு வேலைக்கு முயற்சி செய்யுங்கள்; வேலையினைவிட்டு விட்டு முயற்சி செய்யாதீர்கள். வெளிவட்டாரப் பழக்கங்கள் உங்களுக்குத் தைரியத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.