ரிஷபம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. ரிஷப ராசி அன்பர்களே! ராகு பகவான் ரிஷப ராசியில் 12 ஆம் இடத்தில் இருந்துவந்தார். தற்போது பெயர்ச்சிக்குப் பின்னர் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார்.

யோகக் காரகன் ராகு பகவானால் வீட்டில் எதிர்பார்த்திராத தன வரவு இருக்கும். திடீர் பொருளாதார மேம்பாடு இருக்கும்; திடீர் அதிர்ஷ்டம், திடீர் புகழ், திடீர் செல்வாக்கு என அனைத்தும் கிட்டும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கடனில்  தத்தளித்துவந்த பலரும் பெரிய அளவில் செல்வந்தர்களாவர். சுக்கிரன் உச்சமடையும் வீடான 11 ஆம் வீட்டில் ராகுவின் இட அமர்வு இருப்பதால் அனைத்துவகைகளிலும் திடீர் ராஜயோகத்தினைப் பெறுவீர்கள்.

கடந்த ஆண்டில் பல வீண் விரயச் செலவுகளைச் செய்து இருப்பீர்கள்,  ராகு- கேது பெயர்ச்சிக்குப் பின் கனவிலும் காணாத அளவில் மகிழ்ச்சியினைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டத்தினை நெருங்குகிறீர்கள்; சொல்வாக்கு மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும், அதிகாரம் சார்ந்த துறைகளில் கால் பதிப்பீர்கள். கேது பகவான் 5 ஆம் இடமான கன்னி வீட்டிற்குப் பெயர்கிறார்; வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான சூழல் நிறைந்து இருக்கும்.

அனைத்தும் இருந்தாலும் எதையும் அனுபவிக்க முடியவில்லையே என்ற எண்ணத்தினை கேது பகவான் கொடுப்பார்; இது ஒருவிதமான மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

ராகு ஒருபுறம் அதிர்ஷ்டத்தினை வாரிக் கொடுக்க மற்றொருபுறம் கேது அதிர்ஷ்டத்தினைத் தட்டிப் பறிக்கின்றது. இதில் இருந்துவிடுபட தானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்.

நீங்கள் பிறருக்குக் கொடுக்க கொடுக்க கேதுவின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள்; மற்றொருபுறம் ராகு பகவான் கொடுக்க கொடுக்கவே உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார்.

கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருங்கள். வெளிநாடு சென்று வேலை செய்யவோ அல்லது படிக்கவோ கனவு கண்டு இருந்தோருக்கு கனவு நனவாகும் காலகட்டமாக இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குடும்பத்தில் சுப காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் உங்களுக்குச் சாதகமானதாக மாறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews