ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசி அன்பர்களே! அக்டோபர் மாதத்தினைப் பொறுத்தவரை சுக்கிரன் சிம்ம ராசியில் இட அமர்வு செய்துள்ளார். சுக்கிரனின் பார்வையால் ஆத்மா, புத்தி அனைத்தும் மிகத் தெளிவாக உள்ளது. மனம் மிகத் தெளிவான சிந்தனையுடனும், புத்துணர்ச்சியுடனும் செயலாற்ற தயார் நிலையில் உள்ளது.

இடப் பெயர்ச்சி என்று பார்க்கையில் செவ்வாய் கேது பகவானுடன் இணைகின்றது. அக்டோபர் மாத இரண்டாம் பாதியில் செவ்வாய்- சூர்யன்- கேது பகவான் ஆகிய கிரகங்களின் கூட்டணியில் புதனும் இணைகின்றது.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அக்டோபர் முதல் பாதியில் வீடு வாங்குதல் தொடர்பான விஷயங்களில் மும்முரமாகக் களம் இறங்குவீர்கள். மேலும் பழைய வாகனங்களைப் புதுப்பித்து புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை உயர் கல்வி சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டுவர். மேலும் படிப்பில் மிகவும் கவனத்துடன் படிப்பர், தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவர். கலை, விளையாட்டு சார்ந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றிக் கோப்பைகளைப் பெறுவர்.

இல்லத்தரசிகள் வீட்டிற்குத் தேவையான சிறு சிறு பொருட்களை வாங்கி மகிழ்வர். மேலும் குடும்பத்துடன் சுற்றுலா சிறிய அளவில் செல்வீர்கள். குரு பகவான் 12 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார், வீட்டில் சுப விரயச் செலவுகள் ஏற்படும். மேலும் வாங்கிய பழைய கடனை அடைப்பீர்கள்.

அக்டோபர் 17 ஆம் தேதி சூர்யன் பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார்; புதன் பகவான் பார்வையால் பொருளாதார ரீதியாக பணத் தட்டுப்பாடு இருக்கும்.

மேலும் தொழிலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் மந்தநிலை காணப்படும். வேலை செய்யும் இடத்தில் வீண் பேச்சுகளால் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படும், மேலும் சக பணியாளர்களுடன் மிகவும் தன்மையாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளவும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தற்போதைக்கு திருமண நிச்சயதார்த்தம், திருமணம் என்பது போன்ற விஷயங்களைத் தள்ளிப் போடவும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே பெரிய அளவிலான பிரச்சினைகள் பிளவுகளை ஏற்படுத்தும். மற்றவர்கள் குறித்தோ அல்லது பொதுவான விஷயங்களையோ பேசுதல் என்பது போன்ற தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கவும்.

குழந்தை பாக்கியத்துக்கு காத்திருப்போருக்கு இது பெரிய அளவில் அனுகூலமான மாதமாக இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews