ரிஷபம் மார்கழி மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் வழிபாடு சகல விதத்தில் ஏற்றங்களைக் கொடுப்பதாய் இருக்கும்.

மகான்களின் வழிபாடு பல அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுப்பதாய் இருக்கும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் கழிவுகள் செல்லும் இடத்தில் சிறு சிறு உபத்திரங்கள் ஏற்படும்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை. மேல் அதிகாரிகளுடனும் சரி சக பணியாளர்களுடனும் சரி வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

சிறிய வாக்குவாதம் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திக் கொடுப்பதாய் இருக்கும். வேலையினை விட்டுவிட்டு புது வேலைகளுக்கு முயற்சிக்காதீர்கள்; இருக்கும் வேலையில் இருக்கும் போதே வேறு ஒரு வேலைக்கு முயற்சி செய்யுங்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து எந்தவொரு பெரிய முடிவுகளையும் எடுங்கள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யக் கோரி யாரேனும் ஆசை காட்டினால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் வேண்டும்; இது உங்களுளைப் பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.

பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவோர்களுடன் சற்று தள்ளியே இருத்தல் வேண்டும்; இல்லையேல் பெரிய விபரீதங்களைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சிறிய அளவிலான உடல் தொந்தரவுகளும் பெரிய அளவிலான உபத்திரங்களாக உருவெடுக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. முடிந்தளவு இரவு நேரங்களில் வண்டி, வாகனப் பயணங்களைத் தவிர்க்கலாம்.

பயணங்கள் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் பணவரவு இருக்கும் அளவிற்கு செலவும் இருக்கும். வீண் விரயச் செலவுகள் அதிக அளவில் ஏற்படும்

விரயச் செலவுகளைத் தவிர்க்க முடிந்தளவு சேமிப்பில் கவனம் செலுத்தி விடுங்கள்; இல்லையேல் சுப காரியங்களை நடத்தி சுப காரியங்கள் சார்ந்த கடன்களை வாங்கிவிடுங்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.