ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை சுக்கிர பகவான் 6 ஆம் இடத்தில் இட அமர்வு செய்து மூல திரிகோண நிலையில் மிகவும் வலுப்பெற்று உள்ளார்.

அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். விபரீத ராஜயோகத்தினைப் பெறுவீர்கள். பல நேரங்களில் நீங்கள் இது நடக்கப் போவதில்லை என்று கருதும் விஷயங்களும் நடந்தேறி உங்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுப்பதாய் இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புதன் பகவான் வக்ரம் அடைகிறார், மாத இறுதியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். 8 ஆம் இடத்தில் புதன் பகவான் இட அமர்வு செய்துள்ளதால் வீண் விரயச் செலவுகள் ஏற்படும்.

சனி பகவான் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்களைக் கொடுத்துச் சரியான விஷயங்களைச் செய்ய வைக்கிறார். உங்களின் பல ஆண்டு கால கனவினை நனவாக்கும் வகையில் ஏதாவது ஒரு நல்ல செலவினைச் செய்ய போகிறீர்கள்.

சூர்ய பகவான் செவ்வாய் பகவானுடன் இணைந்து விருச்சிக ராசியில் இட அமர்வு செய்துள்ளார். வேலை வாய்ப்பினைப் பொறுத்தவரை உங்களின் திறமைக்கேற்ற வேலையானது கிடைக்கப் பெறும்.

மேலும் பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வு என்பது போன்ற விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கப்பெறும். சூர்ய பகவானின் ஆக்ரோஷப் பார்வை உங்களை வேகப்படுத்துகின்றது. மேலும் மிகவும் கூர்மையான சிந்தனை கொண்டு செயல்படுகிறீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும், ஏற்கனவே இருக்கும் மனக் கசப்புகளை இருவரும் கூடி அமர்ந்து பேசி முடிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்தாலும் அவை அனைத்தும் சரியாகும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் ஓரளவு உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் நாட்டத்துடன் காணப்படுவர்.

பெரிய அளவில் வருத்தத்தினை ஏற்படுத்தும் வகையிலான விஷயங்கள் எதுவும் நடந்தேறாது. தொழில் வாழ்க்கை என்று கொண்டால் முதலீடு செய்வதற்கு ஏற்ற காலகட்டமாகும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

எந்தவொரு விஷயத்தினையும் முறையாகத் திட்டமிட்டு செய்து முடித்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.